சனிக்கிழமை, நவம்பர் 21
Shadow

MOVIES

மீண்டும் ‘96’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி?!

மீண்டும் ‘96’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் ‘96’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி?! பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 96. முழு காதல் படமாக உருவாகி இருந்த இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தன. தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்தை தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. இந்நிலையில், இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தன் கைவசம் வைத்துள்ள படங்களை முடித்துவிட்டு, பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடிக்க நடிகர் விஜய்சேதுபதி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
வசந்தபாலன் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

வசந்தபாலன் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வசந்தபாலன் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்! இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். இதையடுத்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை பட பிரபலம் துஷாரா விஜயன் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளிப்பருவ நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்ரவர்த்தி ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதுதவிர நடிகர்கள் ஷாரா, ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஆகியோரும்...
இந்தி பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்!

இந்தி பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இந்தி பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்! கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலிவுட்டில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியான படம் ‘மிமி’. இது கடந்த 2011-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘மலா அய் ஹய்ச்சி’ படத்தின் இந்தி ரீமேக் ஆகும். லக்‌ஷ்மண் உடேகர் இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பரம் சுந்தரி பாடல் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. கீர்த்தி சனோன் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. இந்நிலையில், மிமி படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு மொழிகளிலுமே கீர்த்தி சனோன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வ...
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள்! கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘தாமிரபரணி’ படத்தில் அறிமுகமானார் நடிகை பானு. கடைசியாக தமிழில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து 2015-ம் ஆண்டு நடிகை பானுவுக்கும் தொழிலதிபரான ரிங்கு டோமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு தற்போது கியாரா என்கிற மகளும் உள்ளார். அவ்வப்போது, தன்னுடைய மகளுடன் எடுத்து கொள்ளும்  புகைப்படங்கள் பானு சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், பானுவின் மகள் கியாரா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருக்கிறார். இயக்குனர் எம்.பத்மகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’பத்தாம் வளவு’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கியாரா நடித்து உள்ளார்....
மொட்டை தலையுடன் மாஸ் காட்டும் பகத் பாசில்!

மொட்டை தலையுடன் மாஸ் காட்டும் பகத் பாசில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மொட்டை தலையுடன் மாஸ் காட்டும் பகத் பாசில்! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். பகத் பாசிலின் வில்லன் போஸ்டர் இன்று வெளியானது. மொட்டை தலையுடன் மாஸாக இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த படக்குழு, முதல் பாகத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்!

வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்! வெப் தொடரில் நடிக்க சமீபகால கதாநாயகிகள் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், சினிமாவை விட வெப் தொடர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள். வெப் தொடர்களுக்கு தணிக்கை கிடையாது. படுகவர்ச்சியான வசனங்களும், ஆபாசமான காட்சிகளும் வெப் தொடர்களில் அனுமதிக்கப்படுகின்றன. படுக்கை அறை காட்சிகள் தாராளமாக இடம்பெறுகின்றன. இதற்காகவே அதில் நடிக்கும் நடிகர்-நடிகைகளுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள். அதிக சம்பளம் என்ற வசிய வலையில் சிக்கி, படுகவர்ச்சியாக நடித்துள்ள கதாநாயகிகள் வருமாறு:- 1. சமந்தா. இவர், ‘பேமிலி 2’ என்ற வெப் தொடரில் படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறார். 2. ரெஜினா கசன்ட்ரா. பெண்ணும் பெண்ணும் உறவு கொள்கிற ‘லெஸ்பியன்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 3. அமலாபால். தன்னை விட பல வயது மூத்த ஒரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்கிற பெண்ணாக,...
‘தலைவி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!

‘தலைவி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘தலைவி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு! ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக படத்தை திரையிடுவது ஒத்திவைக்கப்பட்டது. நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு தலைவி படத்தை வெளியிடுவோம் என கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார். தற்போது தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 'தலைவி' திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் அதிமுகவினரிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெறும். ...
முழு படத்தையும் ஒரே வாரத்தில் நடித்து முடித்த ஹன்சிகா!

முழு படத்தையும் ஒரே வாரத்தில் நடித்து முடித்த ஹன்சிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
முழு படத்தையும் ஒரே வாரத்தில் நடித்து முடித்த ஹன்சிகா!\ நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘105 மினிட்ஸ்’. இப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ராஜா துஷ்ஷா இயக்கி உள்ளார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, கொரியா, சீனா போன்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். நடிகை ஹன்சிகா, ஒரு வாரத்தில் முழு படத்திலும் நடித்து முடித்துவிட்டாராம். இதுதவிர தமிழில் உருவாகி உள்ள மஹா படத்திலும் நடித்து முடித்துள்ளார் ஹன்சிகா, இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதில் நடிகர் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இது நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் என்பது கு...
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்!

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்! மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி இணைய இருப்பதாக த...