தேசிய விருது கிடைக்காதது வருத்தமா – அசுரன் விழாவில் தனுஷ் சொன்ன ரகசியம்
தேசிய விருது கிடைக்காதது வருத்தமா - அசுரன் விழாவில் தனுஷ் சொன்ன ரகசியம்
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அசுரன்’. வெற்றி மாறன் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.
தனுஷ் பேசும்போது, ‘அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. நான் நடிப்பதற்கு வெற்றிமாறன் நிறைய கண்டெண்ட் கொடுப்பார்.
இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக இருக...









