தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. இங்கு இருப்பவர்கள் பல மொழி படங்களில் பணியாற்றி வருகிறார்கள்.
அதற்கு படத்தின் யதார்த்தத்தை மீறாமல் இருப்பதே முக்கிய காரணம். அந்த வகையில் 2016ல் வெளியான “உறியடி” படத்தில் இடம் பெற்ற சண்டைக்காட்சிகள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக அந்தப் படத்தில் தாபாவில் நடக்கும் சண்டைக்காட்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சண்டைக் காட்சியை யதார்த்தமாகவும் தத்துரூபமாகவும் வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டர் விக்கிக்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வீரம் படத்தில் இடம் பெற்ற அஜித்-அதுல் குல்கர்னி க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியை விக்கி அமைத்தார். இப்படத்தின் சண்டைக் காட்சியும் அதிக அளவில் பேசப்பட்டது.
இப்படத்தில் பயணித்த அனுபவம் பற்றி விக்கி கூறும்போது, நான் உறியடி படத்தில் பணிப...
தீபாவளி ரிலீசில் களம் இறங்கும் ரிஷியின் "மரிஜுவானா"
மரிஜுவானா’ படத்தில் ரிஷி ரித்விக் கதாநாயகனாகவும் ஆஷா பாத்தலோம் நாயகியாகவும் நடித்துள்ளனர். பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எம்.டி.ஆனந்த் இயக்கி உள்ளார். எம்.டி.விஜய் தயாரித்துள்ளார்.
போதை பழக்கத்துக்கு அடிமையான ஒருவனின் சைக்கோ கொலைகளை மையப்படுத்தி தயாராகி உள்ளது இந்த மரிஜுவானா. படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி யூ சான்றிதழ் கேட்டனர். ஆனால் 52 சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் அவற்றை வெட்டி நீக்கினால் யூஏ சான்றிதழ் தருவதாகவும் தெரிவித்தனர். படக்குழுவினர் உடன்படவில்லை. இதையடுத்து படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் எம்.டி.ஆனந்த் கூறியதாவது:-
“உண்மை சம்பவங்களை வைத்து மரிஜுவானா படத்தை எடுத்துள்ளோம். போதைக்கு அடிமையானவர்களால் சமூகத்தில் நடக்க...
அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் இருக்கிறீர்களா? உங்கள் ஆர்வத்தைப் பேரார்வமாக்க இதோ நான்கு காரணங்கள்
இந்த நான்கு காரணங்கள், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் சூரரைப் போற்று படத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்க வைக்கிறது.
ஒவ்வொரு புது அறிவிப்பின் மூலம் அமேசான் ப்ரைம் வீடியோவின் அடுத்த திரைப்படமான சூரரைப் போற்று ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டி வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும், சுவாரசியங்கள் நிறைந்த இந்தத் திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது.
தங்களது சீட் பெல்டினை அணிந்து கொண்டு, ஒவ்வொரு ரசிகர்களும், அழகாகக் கோர்க்கப்பட்டுள்ள இந்தக் கதையை அனுபவிக்கக் காத்திருக்கின்றனர்.
சூர்யா, மோகன் பாபு, பரேஷ் ராவல், அபர்ணா பாலமுரளி ஆகியோர் இதில் நடித்திருக்கின்றனர். குறைந்த விலை...
இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ், கடந்த 1999-ம் ஆண்டு வெளியான தாஜ்மகால் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து சமுத்திரம், மகாநடிகன், அல்லி அர்ஜுனா என சில படங்களில் நடித்து பிரபலமான மனோஜ், தற்போது இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்க உள்ள படம் மூலம் மனோஜ் இயக்குனராக அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் அதே ஆண்டில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். மனோஜ் எந்திரன் படத்தில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது....
2021 பொங்கல் விருந்து: மாஸ்டர் விஜய்யுடன் மோதும் சுல்தான் கார்த்தி , ‘ஈஸ்வரன்' சிம்பு!
கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தில் அமல் படுத்தப்பட்ட ஊரடங்கையடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள், தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கின்றனர். அரசு தரப்பில் இருந்து விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று, நயந்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட சில பெரிய படங்கள் அடுத்த மாதம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு ஓடிடி தளத்தில் ரிலீசாகின்றன.
அதேநேரம், அடுத்த மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட...
*சூரரைப் போற்று' குறித்து மனம் திறக்கும் சூர்யா*
ஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது 'சூரரைப் போற்று' திரைப்படம். சூர்யாவின் நடிப்பு, சுதாவின் துல்லியமான இயக்கம், ஜிவிபிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
தீபாவளிக் கொண்டாட்டமாக நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. முதன்முறையாக 'சூரரைப் போற்று' படம் குறித்து பேட்டியளித்துள்ளார் சூர்யா. அது பின்வருமாறு:
'சூரரைப் போற்று' படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து..
சில படப்பிடிப்புகளில் தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். 'நந்தா...