பேட் கேர்ள் கோடங்கி விமர்சனம் 4/5
பேட் கேர்ள் கோடங்கி விமர்சனம் 4/5
ஒரு பெண் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழ்கிறார்கள்? பெண்களின் உணர்வுகளுக்கு இந்த சமூகம் சரியாக மதிப்பளிக்கிறதா? என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்கிற படம் தான் பேட் கேர்ள்.
பெண்களை போக பொருளாக பார்க்கிறவர்களுக்கு ”பேட்” ஆகவும், பெண்களை ஆக்க சக்தியாக பார்க்கிறவர்களுக்கு “குட்” ஆகவும் தோன்றுவதுதான் பேட் கேர்ள் படம்.
கதைப்படி….
ஹீரோயின் அஞ்சலி பள்ளியில் படிக்கும் போது சக மாணவனை காதலிக்கிறார். இந்த விசயம் அவரது பெற்றோருக்கு தெரிந்து கண்டிப்பதுடன், வேறு பள்ளிக்கு அவரை மாற்றுகிறார்கள். பெற்றோர் மீது கோபமடையும் அஞ்சலி, ”நீங்கள் சொல்வதை எல்லாம் இந்த பள்ளி வரை தான் கேட்பேன், அதன் பிறகு நான் நினைத்தபடி தான் வாழ்வேன்”, என்கிறார். அவர் சொன்னது போலவே கல்லூரி காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி மாணவிகள் விடுதி...









