காப்பான் விழாவில் ரஜினி பரபரப்பு
சூர்யா நடித்து கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள 'காப்பான்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று இரவு நடந்தது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், மோகன்லால், ஆர்யா, இயக்குனர்கள் ஷங்கர், தங்கர் பச்சான், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகை சாயிஷா, இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ், கவிஞர்கள் வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து உள்பட கலந்துகொண்டனர்
மோகன்லால் பேசும்போது, "சூர்யாவை போன்று சினிமாவின் மீது அர்ப்பணிப்பும் காதலும் உடைய ஒரு நடிகரை என் 40 ஆண்டு அனுபவத்தில் பார்த்தது இல்லை. இந்த படத்தில் எனக்கு மகனாக ஆர்யா நடித்துள்ளார். ஆனால் எதிர்பாராத படப்பிடிப்பு காரணமாக அவரது திருமணத்தில் என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, "கே.வி.ஆனந்த் திறமையான இயக்குனர். நான் நடித்...









