‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் தீபாவளி ட்ரீட்!
'மரகத நாணயம்2' திரைப்படத்தின் தீபாவளி ட்ரீட்
பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் 'மரகத நாணயம்2' திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ‘மரகத நாணயம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதல் பாகம் வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் மூலம் ARK சரவன் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, வெளியீட்டிற்கு தயாராகி வரும் இதன் இரண்டாம் பாகத்தையும் இவரே எழுதி இயக்கியுள்ளார்.
சாபமிடப்பட்ட மரகதக் கல், குறும்புத்தனமான ஆவிகள், நகைச்சுவை கலந்த சாகசப் பயணம் என இந்தத் திரைப்படம் அனைத்து தரப்ப...








