விரைவில் கைதி 2 வரும் – கார்த்தி மகிழ்ச்சி தகவல்
நமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான். 'கைதி 2' எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். - நடிகர் கார்த்தி
தீபாவளி வாழ்த்துக்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசியதாவது:-
'கைதி' படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். நான் லாரி ஓட்டுவதைப் பார்த்த அனைவரும் லாவகமாக ஒட்டுகிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள். சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும் என்றேன். அந்த அனுபவத்தில் லாரி ஓட...









