போர்ச்சுக்கல் நாட்டில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளியின் நேசிப்பாயா!
போர்ச்சுக்கல் நாட்டில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளியின் நேசிப்பாயா!
அறிந்தும் அறியாமலும், பட்டியல், அஜித்துடன் பில்லா,ஆரம்பம் ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தியில் ஷெர்ஷா என்ற படத்தை இயக்கினார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
அதன்பின் இப்போது, மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மருமகன் இயக்குநர் சினேகாவின் கணவர் எனப் பல பெரிய அடையாளங்களைக் கொண்ட ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் நேசிப்பாயா படத்தை இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கொச்சலின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக சினேகா பிரிட்டோ பணியாற்றியுள்ளார். யுவன் ச...









