ஒத்தையில நிக்கென், தில் இருந்தா மொத்தமா வாங்கல – கலக்கும் காலா
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசர் சமூக வலைதளங்களை அல்லோ கல்லோலப்படுத்தி வருகிறது. இன்று காலை 10 மணிக்கு டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட்டார்.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினி வயதான தோற்றத்தில் கரிகாலன் என்ற பெயரில் நடித்திருக்கிறார்.
இந்த டீசரில், குறிப்பாக ரஜினி பேசும் வசனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. காலா - என்ன பேருய்யா என்ற நானா படேகரின் கேள்விக்கு, ‘காலா’ன்னா கருப்பு, காலன், கரிகாலன், சண்டை போட்டு காக்கிறவன்’ என்ற சமுத்திரக்கனியின் பதில் பின்னணியில் ஒலிக்கின்றது.
கருப்பு உழைப்போட வண்ணம், என் இடத்துல வந்து பாரு, அழுக்கு அத்தனையும் வண்ணமாக தெரியும். கியா ரே, செட்டிங்கா, வேங்கை மவன் ...









