மீண்டும் இயக்குநராக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா!
*எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் “கில்லர்” !*
*பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !!*
நீண்ட நாள் காத்திருப்பு ரசிகர்களை ‘குஷி’ படுத்தியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். அவர் இயக்கி நடிக்கும், அவரது கனவுப்படமான “கில்லர்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.
நடிகராக இந்தியளவில் கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக எப்போது படம் தருவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், “கில்லர்” படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.
அஜித்தின் ‘வாலி’ படம் மூலம் திரையுலகில் இயக்குநராக கால் பதித்த எஸ்.ஜே.சூர்யா, முதல் படத்திலேயே தென்னிந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். இரண்டாவது படமான விஜய் நடித்த ‘குஷி’ பட வெற்றி மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது. பான் இந்தியா என...









