ஷூட்டிங் ஸ்பாட்டுக்கா கோர்ட் வரும் இயக்குனர் ஷங்கரை கண்டித்த நீதிமன்றம்..!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘எந்திரன்’. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளனர். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் ஷங்கர் தன் தரப்பில் உள்ள ஆதார ஆவணங்களை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ‘மாஸ்டர்’ கோர்ட்டில் தாக்கல் செய்து, ஏப்ரல் 27...









