ஊட்டியில் படமான திகில் படம் ரோஜா மாளிகை..!
மகாகவிதிரைக்களஞ்சியம் வெர்லிங்டன் பாரதியார் பெருமையுடன் வழங்க, தளபதி ஈஸ்வரன் நல்லாசியுடன் பர்ஸ்ட் லுக் மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ரோஜாமாளிகை "
அமரன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக புதுமுகம் ஊர்வசி வத்ராஜ் அறிமுகமாகிறார். மற்றும் நிழல்கள் ரவி, ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, மதுரை முத்து, பாண்டு, கராத்தே ராஜா, கொட்டாச்சி, ரேஷ்மா சுகி நாயக்கர், தேவிஸ்ரீ ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கெளதம் நடிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கெளதம். ...









