ரிலீஸ் சிக்கல்…ஜனநாயக(னி)ன் நாளை(ய) தீர்ப்பு..!
ரிலீஸ் சிக்கல்...ஜனநாயக(னி)ன் நாளை(ய) தீர்ப்பு..!
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் விவகார வழக்கில் நாளை (ஜனவரி 9 ஆம் தேதி) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா தீர்ப்பு வழங்க இருக்கிறார்.
நடிகர் விஜய்யின் 69 ஆவது மற்றும் கடைசிப் படமான ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாக இருந்தது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு அனிரூத் இசையமைத்து உள்ளார்.
இந்த நிலையில் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால், படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்க இருக்கிறது. தீர்ப்பை நீதிபதி பி.டி. ஆஷா வழங்க இருக்கிறார்.
நேற்றிரவு ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள ச...









