சீதக்காதி எல்லா தரப்பையும் பேசும் படம் -விஜய்சேதுபதி
தனக்கு இல்லை என்றாலும் உயிரையும் கொடுப்பான் சீதக்காதி என்பார்கள் அந்தளவுக்கு கொடைவள்ளல் ஆன சீதக்காதி பெயர் தாங்கி வரும் படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியும் தாராள மனதுடன் இருக்கிறார். 20ம் தேதி சீதக்காதி ரிலீசுடன் இணைந்து ரிலீஸ் ஆகும் எல்லா படஙகளும் வெற்றி பெற வேண்டும் என விழாவில் விஜய்சேதுபதி பேசியது குறிப்பிடத்தக்கது
75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இது விஜய் சேதுபதியின் 25-வது படம். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மிக பிரமாண்டமாக வெளியிடும் இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
படத்தின் இயக்குனர் பாலாஜி தரணி தரண் பேசியதாவது,
இந்த படத்தை உருவாக்கும்போது நான் மிகவும் மகிழ்ந்த விஷயம் நாடக கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது தான். எல்லோரும் மிகவும் தி...









