ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது !!
ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் குலை நடுங்க' படத்தின் அதிரடி டீசர் வெளியானது !!
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட “தீயவர் குலை நடுங்க” படத்தின் டீசர்
ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தீயவர் குலை நடுங்க' திரைப்படத்தின் அதிரடி டீசர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், இன்று இப்படத்தின் டீசரை சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.
சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் என்பதை மையப்படுத்தும் இந்த க்ரைம் திரில்லர் படத்தின் டீசர், ஆக்சன் கிங்...









