திங்கட்கிழமை, நவம்பர் 9
Shadow

MOVIES

சேரன் நடிப்பில் உறவுகளை பலப்படுத்தும் ராஜாவுக்கு செக் பட ஆடியோ வெளியீடு..!

சேரன் நடிப்பில் உறவுகளை பலப்படுத்தும் ராஜாவுக்கு செக் பட ஆடியோ வெளியீடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  Pallatte kokkatt film house வழங்கும் படம் ராஜாவுக்கு செக். இப்படத்தை SDC பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியீடுகிறது. சேரன் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை சாய் ராஜ்குமார் எழுதி இருக்கிறார். இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர், விழாவில் தயாரிப்பாளர் தாமஸ் கோக்காட்டி அனைவரையும் வரவேற்று பேசினார். ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு பேசியதாவது, "பெரிய படம் சின்னபடம் என்பது இல்லை. நல்லபடம் நல்லா இல்லாத படம் அவ்வளவு தான். அப்படி நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பணியாற்றி வருகிறேன். சேரன் திரில்லர் படத்திற்கு ஏற்றார் போல் மிக சிறப்பாக நடித்துள்ளார்" என்றார் இயக்குநர் சரண் பேசியதாவது, " அனைவரையும் இயக்குநர் சாய் ராஜ்குமார் சார்பாக வரவேற்கிறேன். சேரன் எனக்கு முன்பாகவே நல்ல பழக்கம். சேர...
பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி

பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  *பாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை சாந்தினி* ஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு. நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே .. அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாந்தினி க்கு தனி இடம் உண்டு. சித்து +2 வில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான ராஜா ரங்குஸ்கி வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங்களை உயர்த்தியது. இவருக்கு நடிப்பில் பெரிய நல்ல பெயரையும் பெற்று கொடுத்தது. இவரது நடிப்பை கண்டு வ...
விக்ரம் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் நடிகராக களம் இறங்குகிறார்..!

விக்ரம் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் நடிகராக களம் இறங்குகிறார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார். அவர் இப்படத்தில் நடிக்க இருக்கும் செய்தியை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். சீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம்தான் இர்பான் பத்தான் தனது திரையுலக பயணத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம் ஆண்டு, லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்த இர்பான், இப்பொழுது தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் சீயான் விக்ரம்58 படத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார். எந்த சவாலான கதாபாத்திரத்தையும் தனது நடிப்புத் திறமையாலும் அர்ப்பணிப்பா...
உலகின் மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் கோரிக்கை!

உலகின் மூத்த நடிகர் சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் கோரிக்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சாருஹாசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் கோரிக்கை! உலக நாயகன் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் கடந்த ஆண்டு தாதா87 என்ற படத்தின் மூலமாக கதை நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை விஜய்ஸ்ரீ என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இந்தியாவிலேயே 87 வயதில் கதை நாயகனாக நடித்து பரபரப்பாக பேசப்பட்ட படம் தாதா87. அதிக வயதான நடிகர்களில் உலக அளவில் சாருஹாசன் தான் முதலிடத்தில் இருக்கிறார். அவர் நடித்த தாதா87 படமும் திருநங்கைகளின் உணர்வுகளைப் பற்றி பரபரப்பான கருத்தை பதிவு செய்திருந்தது. இப்போது சாருஹாசன் பிசியான நடிகராக மாறியிருக்கிறார். பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மத்திய அரசு கலைத்துறையை சேர்ந்த பலருக்கு அவர்களின் சாதனையை கவுரவிக்கும் வகையில் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கிறது. 90 வயதிலும் பிசியான ந...
பப்பி ஷேம்… ஷேம் – கோடங்கி விமர்சனம்

பப்பி ஷேம்… ஷேம் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  பப்பி ஷேம்... ஷேம் - கோடங்கி விமர்சனம் வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்த படம் பப்பி. வருண், யோகிபாபு, சம்யுக்தா நடித்த படத்தை நட்டுதேவ் இயக்கி இருந்தார். கல்லூரி மாணவனின் வயசு கோளாறு என்னவெல்லாம் செய்கிறது என்பதுதான் படத்தின் ஒருவரி கதையே. கல்லூரி வகுப்பறையில் பலான படம் பார்த்து சஸ்பெண்ட் ஆகும் கதாநாயகன் வருணுக்கு நண்பன் யோகிபாபு. வருண் வீட்டில் வாடகைக்கு குடி வரும் சம்யுக்தாவை காதலிக்கிறார். கல்யாணத்திற்கு முன்பே இருவரும் எல்லை மீறுகிறார்கள். அதன் பின் என்ன ஆகிறது என்பதை சொல்கிறது பப்பி. வருண் ரொம்ப ஆர்வ கோளாறான பையன் போல துறு துறுவென ஓடுகிறார். பல இடங்களில் அவர் நடிப்பது ரொம்பவே தெரிகிறது. தான் வளர்க்கிற நாய் மீது காட்டும் பாசத்தை கூட காதலி சம்யுக்தா மீது காட்டத்தெரியாத கதா நாயகன். சம்யுக்தா அசப்பில் கஸ்தூரி போல தெரிகிறார். மற்றபடி அவரது கத...
ரஜினி மீண்டும் இமயமலை பயணம்..!

ரஜினி மீண்டும் இமயமலை பயணம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படப்பிடிப்பு முடிந்து மும்பையில் இருந்து கடந்த வாரம் சென்னை திரும்பினார் ரஜினி. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கும் புதுப்பட அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த சூழலில் சன் டிவி தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க தேவையான எனர்ஜியை ஏற்றிக் கொள்ளும் நோக்கில் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்! இதற்க்காக சென்னையில் இருந்து இன்று காலை 6.40 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்ற ரஜினி, இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றார். அங்கிருந்து காரில் அடுத்தடுத்த இடங்களுக்கு செல்ல ரஜினி திட்டமிட்டுள்ளாராம்.ஆன்மீக பயணமாக சென்றுள்ள ரஜினி, இந்த பயணத்தின் போது கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு பயணிக்க உள்ளாராம்.அத்துடன் துவா...
விஜய் – அட்லி கூட்டணியின் பிகில் டிரைலர் ரிலீஸ்… ரசிகர்கள் கொண்டாட்டம்..!

விஜய் – அட்லி கூட்டணியின் பிகில் டிரைலர் ரிலீஸ்… ரசிகர்கள் கொண்டாட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    விஜய் - அட்லி கூட்டணியின் பிகில் டிரைலர் ரிலீஸ்... ரசிகர்கள் கொண்டாட்டம்..! ஏ.ஜி.எஸ் மிக பிரமாண்டமான தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் பிகில். இதில் நயன்தாரா, யோகிபாபு, இந்துஜா உட்பட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இன்று மாலை 6 மணிக்கு டிரைலர் வெளியானது. டிரைலர் வெளியானதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் அதை பார்த்து கொண்டாடி வருகின்றனர். https://youtu.be/GR-Ui8-V2M0...
ஸ்ரீகாந்த் – நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் “சம்பவம்”

ஸ்ரீகாந்த் – நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் “சம்பவம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் சம்பவம்* மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு "சம்பவம்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் பங்கு பெறுகின்றனர். நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை ச...
நல்ல கருத்துள்ள சின்ன பட்ஜெட் படங்களை நசுக்கும் 5 பேரின் அராஜகம் – ஆவேசமாகும் இயக்குனர் சுரேஷ் காமாட்சி

நல்ல கருத்துள்ள சின்ன பட்ஜெட் படங்களை நசுக்கும் 5 பேரின் அராஜகம் – ஆவேசமாகும் இயக்குனர் சுரேஷ் காமாட்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  “எனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நேற்று (அக்-11) வெளியாக இருந்த ‘மிக மிக அவசரம்’ திரைப்படம் சொன்னபடி வெளியாகவில்லை.. பெண் காவலர்களின் வலியைப் பற்றி பேசும் நல்ல படம் என விநியோகஸ்தர்களே பாராட்டிய இந்தப்படம் ஏன் வெளியாக முடியாமல் போனது..? கடந்த 15 நாட்களுக்கு முன்பே போதுமான தியேட்டர்கள் கிடைக்கும் என உறுதி செய்யப்பட்ட பின்னரே ரிலீஸ் தேதியை முடிவு செய்து விளம்பரங்கள் செய்ய ஆரம்பித்தோம்.. ஆனால் எங்களுக்கு பிறகு வந்த. நேற்றைய தேதியில் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்ட படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தியேட்டர்களை ஒதுக்கியுள்ளார்கள்.. ஏனென்றால் தியேட்டர் அதிபர்களில் சிலரே சம்பந்தப்பட்ட அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் செய்திருக்கிறார்கள்.. அதனாலேயே அந்த படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அதுமட்டுமல்ல வெளி மாநில படங்களுக்கும் கூட அதிக மு...
மிக மிக அவசரம் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்..? லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்

மிக மிக அவசரம் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்..? லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
மிக மிக அவசரம் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்..? லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்   நல்ல படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம் ; லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் விரக்தி வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தான் இந்தப்படத்தை வெளியிடுகிறார். ஆனால் இந்த படம் இன்று...