‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார் சீனாவில் முதல் நாளில், ரூ.43 கோடி வசூல்செய்து சாதனை..!
இந்தி நடிகர் அமீர் கான் நடித்த 'டங்கல்', 'பி.கே.' திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்த நிலையில், சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்துள்ள 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' திரைப்படத்திற்கு சீனாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
'டங்கல்' படம் சீனாவில் திரையிடப்பட்ட முதல் நாள் கிடைத்த, வசூலைக் காட்டிலும், 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' வெள்ளிக்கிழமை திரையிடப்பட்ட முதல் நாளில், ரூ.43 கோடி வசூல்செய்து சாதனை படைத்துள்ளது.
'டங்கல்' திரைப்படத்தில் நடித்துள்ள காஷ்மீர் நடிகை ஜயிரா வாசிம் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அமீர் கான் சிறப்பு கதாபாத்திரத்தில் வருகிறார்.
https://youtu.be/P6jaRsnchro
இந்த திரைப்படம் குறித்து திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அமீர் கான் நடித்து சமீபத்தில் வெளியான 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' திரைப்படம் சீனாவில் வெள்ளி...









