அரசு குறிப்பிடும் விலைக்கு மேல் சினிமா டிக்கெட் விலை விற்கப்பட்டால் நானே சென்று அடிப்பேன் – மன்சூர் அலிகான் ஆவேசம்
'உன் காதல் இருந்தால்' படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது.
லெனா (நடிகை)
ஹாசிம் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் மிகவும் சவாலாக இருந்தது. நான்கு வித்தியாசமான பாத்திரமாக இருக்கும். அதிலும் புகைபிடிக்கும் காட்சிகள் கடினமாக இருந்தது. இருப்பினும், என்னுடைய கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
நான் தற்போது விக்ரமுடன் 'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கி றேன்.
மபுள் சல்மான் (மற்றொரு கதாநாயகன்)
தமிழ் கொஞ்சம் தான் தெரியும். மலையாளத்தில் 15 படங்கள் நடித்திருக்கிறேன். தமிழ் படங்கள் நிறைய பார்ப்பேன். எனக்கும் என் பெரியப்பா மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் மாதிரி தமிழ் படத்தில் நடிக்க ஆவலாக இருந்தேன். அப்போது தான் ஆசிப் இந்த வாய்ப்பை கொடுத்தார். தமிழில் முதல் படம். எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
...









