’காளிதாஸ் 2’ திரைப்பட விமர்சனம்
ஸ்கை பிக்சர்ஸ் “ஃபைவ் ஸ்டார்” கே. செந்தில் மற்றும் டாக்டர். என். யோகேஸ்வரன் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் ,அஜய் கார்த்தி , சங்கீதா,பவானி ஸ்ரீ, அபர்ணதி ,அனந்த் நாக் ,பிரகாஷ் ராஜ் ,கிஷோர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’காளிதாஸ் 2’
சென்னை புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இதே அடுக்குமாடி குடியிருப்பில் அபர்ணதி – அனந்த் நாக், தம்பதிகள் 4 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
மறுநாள் புதுவருடம் பிறப்பதால் அந்த குடியிருப்பில் ஆட்டம், பாட்டு என்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதே சமயம் அபர்ணாதியின் 4 வயது பெண் குழந்தை காணாமல் போகிறது. இதனையடுத்து குழந்தையை கண்டுபிடிப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ அங்கு வருகிறார்கள்.
அதே குடியிருப்ப...









