வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் கமல்ஹாசன் -கோவையில் 2 நாட்கள் பிரசாரம்!
கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.
கமல்ஹாசன் ஒரு மாதம் கோவையிலேயே தங்கி இருந்து, நகரில் இருக்கக்கூடிய முக்கிய பகுதிகளுக்கு ரோடுஷோ மூலமும், வீதி வீதியாக நடந்து சென்றும் மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கமலின் இந்த பிரசாரம் அப்போது மக்கள் மத்தியில் வித்தியாசமாகவும், மிக வரவேற்பையும் பெற்றது.
இருப்பினும் அந்த தேர்தலில் கமல்ஹாசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வை சேர்ந்த வானதி சீனிவாசனிடம் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
கோவையில் தங்கியிருந்து கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்ட போதும், எப்படி தோற்றோம் என்பதை மக்கள் நீதி மய்யத்தினர் தேர்தல் முடிந்த கையோடு, வார்டு மற்றும் பூத் வாரியாக ஆய்வு செய்தனர்.
அப்போது சில பூத்களில் மட்டுமே வாக்குகள் பின்தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங...









