புதன்கிழமை, ஜூலை 8
Shadow

தமிழக அரசியல்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
கோவை சுகுணாபுரத்தில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட 60 இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் 13 லட்சம் சிக்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோவையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். வேலுமணிக்குச் சொந்தமான 58 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்....
கிராக்கி அதிகமுள்ள சீர்திருத்த திருமணத்தை நடத்தும் புரோகிதர் நான் – திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி

கிராக்கி அதிகமுள்ள சீர்திருத்த திருமணத்தை நடத்தும் புரோகிதர் நான் – திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி

HOME SLIDER, kodanki voice, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    வைதீக புரோகிதரைவிட கிராக்கி அதிகமுள்ள சீர்திருத்த திருமணத்தை நடத்தும் புரோகிதர் நான் - திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி   https://youtu.be/I7bgRnbGpb4  
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். திமுக நபரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே திமுக நபரை தாக்கிய வழக்கு,சாலை மறியல் செய்த வழக்குகளில் ஜாமீன் பெற்றிருந்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதனால் கடந்த 21ஆம் தேதியில் இருந்து புழல் சிறையில் உள்ள அமைச்சர் ஜெயக்குமாரை  வரவேற்க 1000க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் நேற்று மாலை புழல் சிறை முன்பு கூடினர். அதிமுகவின் தொண்டர்கள் சிறை வாசல் முன்பு கூடி வந்த நிலையில் சிறைத்துறை விதிப்படி மாலை 6 மணிக்கு மேலாக கைதிகளை விடுவிக்க கூடாது என்ற விதி உள்ள ந...
சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் சர்ச்சைக்கு சூர்யா மன்னிப்பு கேட்காததை தொடர்ந்து ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட பாமக மாநில சங்க செயலாளர் ஜெயவர்மன் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக, சென்னை ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு ஏற்கனவே 5 போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளித்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக பாதுகாப்பு வழங்க சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளது....
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் பா.ம.கவுக்கு கண்டனம்!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் பா.ம.கவுக்கு கண்டனம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, செய்திகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
  திரைக்கலைஞர் சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் 10.03.2022ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தை திரையிடக்கூடாதென பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை கடிதம் மூலம் மிரட்டிவருவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வரும் 10-ம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ், பிரியங்கா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கடலூரில் வெளியிடக் கூடாது என்று பா.ம.க மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் விஜயவர்மன் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் க...
சூர்யா படத்திற்கு எதிர்ப்பு!

சூர்யா படத்திற்கு எதிர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம்  பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இருப்பினும் ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்கிற குற்றச்சாட்டும் அப்போது முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவரான ராஜ்யசபா எம்.பி. அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் நடிகர் சூர்யாவுக்கு பல கேள்விகள் எழுப்பி இருந்தார். அந்த அறிக்கையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்து இருந்தார். நடிகர் சூர்யாவும் அன்புமணிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அன்புமணி குறிப்பிட்டது போல எந்தவொரு தனிநபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக்குழுவினருக்கும் தனக்கும் இல்லை. சொல்பவர் சுட்டிக்காட்டிய தவற்றை உடனடியாக திருத்தினோம். படைப்புச் சுதந்திரம் யாரையு...
காதல் திருமணம் செய்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மகள் கர்நாடக போலீசிடம் தஞ்சம்!

காதல் திருமணம் செய்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மகள் கர்நாடக போலீசிடம் தஞ்சம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள், காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனரை அணுகியுள்ளார். அவர் போலீஸ் கமிஷனர் கமல் பந்த்திடம் பாதுகாப்பு கோரி மனு கொடுத்தார். கமிஷனர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபுவின் மகள், “நான் ஜெயக்கல்யாணி அமைச்சர் சேகர்பாபுவின் மகள். இவர் சதீஷ் நாங்கள் இருவரும் 6 வருடங்களாக காதலித்து வருகிறோம். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். நாங்கள் இருவரும் விருப்பப்பட்டு தான் திருமணம் செய்துகொண்டோம். 2021 ஆகஸ்ட் மாதம் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினோம். மூன்று நாள்களுக்கு பிறகு எங்களை புனேவில் வைத்து பிடித்தனர். பின்னர் அங்கிருந்து இங்கு அழைத்து வந்தனர். திருவள்ளூரில் 2 மாதம் அவரை சட்டத்துக்கு புறம்பாக போலீஸ...
Ukraine War – உக்ரேனில் இருந்து தமிழகம் வந்த மாணவர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

Ukraine War – உக்ரேனில் இருந்து தமிழகம் வந்த மாணவர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, ukrain war, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  Ukraine War - உக்ரேனில் இருந்து தமிழகம் வந்த மாணவர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!   https://youtu.be/vIycmx18WZE    
சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன் – தூத்துகுடியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன் – தூத்துகுடியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன் என புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக இன்று இரவு தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு வெண்கலத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆளுயரச் சிலையை முதல்வர் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டக் கழக அலுவகத்தில் கலைஞரின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய மாவட்ட கழகத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கை கனிமொழிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கலைஞர் மறைவுக்கு பின்னர்,...
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் சஸ்பெண்ட்!

கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் சஸ்பெண்ட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் பதவியில் இருந்து எம்.ரவிக்குமார் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான வார்டுகளை திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கைப்பற்றின. இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுகவினர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி பெற்றனர். இதனை சுட்டிக்காட்டி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, இதுபோல் வெற்றி பெற்ற திமுகவினரை பதவியில் இருந்து விலகுமாறு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அவ்வாறு பதவி விலகாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,...