புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

ரத்தம் குடிக்கும் ஓநாய்களாய் லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள் இ.பாஸ் முறைகேடு குறித்து கோர்ட் கடும் அதிருப்தி!

ரத்தம் குடிக்கும் ஓநாய்களாய் லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள் இ.பாஸ் முறைகேடு குறித்து கோர்ட் கடும் அதிருப்தி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ரத்தம் குடிக்கும் ஓநாய்களாய் லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள் இ.பாஸ் முறைகேடு குறித்து கோர்ட் கடும் அதிருப்தி! திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சி.எம்.சிவபாபு, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பள்ளி மாணவர்களை ஒரு கும்பல் அழைத்துச் சென்று திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளதாகவும், ஊரடங்குக்கு பின், பள்ளிக்கூடம் திறந்தால் இந்த மாணவர்கள் எல்லாம் படிக்கச் செல்வது கேள்வி குறியாக உள்ளது என்றும் கூறி இருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது, அவினாசியில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் பள்ளி மாணவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக நீதிபதிகளுக்கு த...
நடிகர் ராணா காதலியை கரம் பிடித்தார்.

நடிகர் ராணா காதலியை கரம் பிடித்தார்.

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ராணா காதலியை கரம் பிடித்தார். லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானாலும் பாகுபலி படம் தான் ராணாவை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. இவர் தமிழில் ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபருக்கும் திருமணம் ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரும் கொரானா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது இந்த சூழலில் அறிவிக்கப்பட்ட நாளான இன்று ராணாவுக்கும் மஹிமாவுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. சக நடிகர் நடிகைகள் திரையுலக பி...
நடிகை ஜோதிகாவை பாராட்டிய தமிழக அரசு!

நடிகை ஜோதிகாவை பாராட்டிய தமிழக அரசு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  *தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!* *அமைச்சர், ஆட்சியர் பாராட்டு!* நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்  மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது.   சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் ...
அயோத்தியில் உருவாகும் இலவச பாபர் மருத்துவமனை உருவாகிறது!

அயோத்தியில் உருவாகும் இலவச பாபர் மருத்துவமனை உருவாகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *இலவச சேவையோடு உருவாகப்போகிறது பாபர் மருத்துவமனை* ! *நீதி மன்றத்தின் உத்தரவின்படி வஃக்பு வாரியதிற்கு கிடைக்கும் 5 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான பாபர் மருத்துவமனை கட்ட வாரியம் முடிவு*... *இலவசமாக செயல்படும் இந்த மருத்துவமனை நிர்வாகிக்கும் பொருப்பு மற்றும் தலைமை மருத்துவராக டாக்டர் கபில்கான் அவர்களை நியமனம் செய்யபடும்* ... *AIIMS மருத்தவ மனையைவிட பிரம்மாண்டம் செயல்படுத்த வஃக்பு வாரியம் முடிவு*...!!...
கேரளா விமான விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

கேரளா விமான விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
துபாயில் இருந்து கேரளா வந்த சிறப்பு விமானம் விபத்தில் சிக்கியதில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் 184 பயணிகள் மற்றும் 6 விமான பணிக்குழுவினர் என மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்க முற்பட்டது. ஆனால் அப்போது ஓடுதளத்தில் வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானம் இரண்டு பாகங்களாக உடைந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த அருகில் வசித்து வந்த கிராமத்தினர் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிராமத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் அர...
கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் சசிகலா விடுதலைக்கு சிக்கல்!

கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் சசிகலா விடுதலைக்கு சிக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமனம் சசிகலா விடுதலைக்கு சிக்கல்! வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் 2021 பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. இதற்கிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறைத்துறை டி.ஜ.ஜி.யாக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி, சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டிருந்ததாகவும், இதற்காக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தவருக்கு ரூ.2 கோடி லஞ்சம் தரப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டார். இது கர்நாடகம், தமிழகம் தாண்டி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து அப்போது முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா, ஓய்வு ...
6 ஆண்டுகளாக எச்சரித்தும் அரசு அலட்சியம் காட்டியதுதான் லெபனான் வெடிவிபத்துக்கு காரணமாம்!

6 ஆண்டுகளாக எச்சரித்தும் அரசு அலட்சியம் காட்டியதுதான் லெபனான் வெடிவிபத்துக்கு காரணமாம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    6 ஆண்டுகளாக எச்சரித்தும் அரசு அலட்சியம் காட்டியதுதான் லெபனான் வெடிவிபத்துக்கு காரணமாம்! லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஆகஸ்ட் 4 பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது. இந்த வெடிவிபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. துறைமுகப்பகுதியே நிலைகுலைந்தது. இந்த கோரவிபத்தில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 டன் அளவிலான வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளது. இந்நிலையில், துறைமுக சேமிப்பு...
நான் ஒரு ஏலியன் சொல்கிறார் ஹிப் ஆப் ஆதி!

நான் ஒரு ஏலியன் சொல்கிறார் ஹிப் ஆப் ஆதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  2012-ல் வெளிவந்த ஹிப்ஹாப் தமிழாவின் ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பம் மூலம் தமிழுலகத்திற்கு ‘ஹிப்ஹாப்’ எனும் புதிய வகை இசையை அறிமுகப்படுத்திய பெருமை Think Music-க்கு உண்டு. இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் அதுதான். திரையிசை கோலோச்சிய காலத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சுதந்திர இசை ஆல்பமான ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஏற்படுத்திய அதிர்வுகள் இன்றும் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் ‘ஹிப்ஹாப்’ எனும் சொல், இசையின் ஒரு வகையாகக் கொள்வதைவிட ஒரு கலைஞரை குறிக்கக் கூடியதாகவே மாறிவிட்டது. சமகாலத்தில் உலகின் மிகப்பெரும் தமிழ் ராப்பிசைக் கலைஞராக திகழ்வதற்கு மேலாக, வெற்றிகரமான நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியராகவும் ‘ஹிப்ஹாப் தமிழா’ புகழ்பெற்றுள்ளார். வரும் சுதந்திர தினத்தன்று திரைப்படங்கள் சாராத சுதந்திர இசையுலகில் ‘நான் ஒரு ஏலியன்’ (Naa oru Alien) ஆல்பம்...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தென்மாவட்ட பயண விவரம்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தென்மாவட்ட பயண விவரம்.

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தென்மாவட்ட பயண விவரம். தமிழகத்தில் கொரோனா பரவல் நிலவி வருகிறது. அதன் தடுப்புப் பணிகள் பற்றி ஆய்வு செய்வதற்காக மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று வருகிறார். இன்று (5-ந் தேதி) பிற்பகல் 2 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சேலம் செல்கிறார். இரவில் சேலத்தில் தங்குகிறார். 6-ந் தேதியன்று (நாளை) காலையில் சேலத்தில் இருந்து புறப்பட்டு கார் மூலம் திண்டுக்கல் செல்கிறார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். திண்டுக்கல் கலெக்டர் மற்றும் பல அதிகாரிகளுடன் கொரோனா தடுப்புப் பணிகள் பற்றி ஆய்வு மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், சிறு, குறு, நடுத்...