விற்பனைக்கு செல்லும் விவசாயிகளை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது – சேலத்தில் முதல்வர் உத்தரவு
விற்பனைக்கு செல்லும் விவசாயிகளை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது - சேலத்தில் முதல்வர் உத்தரவு
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கிரிலோஸ்குமார், மஞ்சுநாதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் கொரானா பரவிய 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் கொரானாவை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கொரானா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரானா நிவாரணத் தொகையான ரூ.1,000 குடும்ப அட்டைதாரர்களில் 98 சதவீதம் பேருக்கு...









