மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தயார் – சந்திரபாபு நாயுடு
ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அம்மாநிலத்தில் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது. 2014-ம் ஆண்டு தேர்தலின் போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், அது நிறைவேற்றப்படவில்லை.
கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் இவ்விவகாரம் எதிரொலித்ததின் விளைவாக இரு அவைகளும் அம்மாநில எம்.பி.க்களால் முடக்கப்பட்டன. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் தொடர்வதால் மாநிலத்தில் கடும் அழுத்தத்தை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார். இதன் காரணமாக ஆந்திராவின் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என சில நாட்களுக்கு முன்னதாக கூறியிருந்தார்.
...









