2016 தேர்தலில் 2,928 இம்முறை வெறும், 1,417 ஓட்டுகளை மட்டுமே பா.ஜ.,1,511 ஓட்டுகள் போனது எங்கே? தீவிரமாய் தேடுது
1,511 ஓட்டுகள் போனது எங்கே? தீவிரமாய் தேடுது தமிழக பா.ஜ.,
கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசலும், களத்தில் முன்கூட்டியே இறங்கி வேலை செய்யாததாலும், ஆர்.கே.நகரில், பா.ஜ., தலைகுனியும் அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த முறை கிடைத்ததில், 1,511 ஓட்டுகள், இந்த முறை எங்கே போயின என்பது தெரியாமல், அக்கட்சியினர், தற்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில், அரசியல் மேடைகளில், 'கோட்டையில் தாமரை மலரும்' என, பா.ஜ., தலைவர்கள் முழங்கி வருகின்றனர். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வெறும், 1,417 ஓட்டுகளை மட்டுமே பெற்றிருப்பது, கட்சியினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 2016 தேர்தலில், அங்கு பா.ஜ., 2,928 ஓட்டுகளை பெற்றிருந்தது. ஆனால், இம்முறை, 'நோட்டா'வை விட குறைவாக பெற்றுள்ளது. இது, தொண்டர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி உள்ளது.
இது குறித்து, தமிழக பா.ஜ.,வினர் கூறியதாவது: சென்னை, ஆர்.க...









