திமுகவின் தோல்வி என்பதைவிட, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்துள்ள இமாலயத் தோல்வி -ஸ்டாலின்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திமுக வேட்பாளருக்குத் தோல்வி என்பதைவிட, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்துள்ள இமாலயத் தோல்வி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''1967 பொதுத்தேர்தலில் அறிஞர் அண்ணா தலைமையில் திமுக மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு முன், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து முடிந்த உடன் தர்மபுரியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றியைப் பறிகொடுக்க நேர்ந்தது. பாளைச் சிறையில் இருந்து வெளிவந்த தலைவர் கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் 'தர்மபுரி இடைத்தேர்தல் வெற்றி குறித்து என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டபோது, தர்மபுரியில் வாக்காளர்களுக்கு கொடுத்த 'தர்மம் வென்றது' எனக் குறிப்பிட்டார். அதேபோல இன்று ஆர்.கே.நகர் தொகுதியிலும் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட 'தாராளமானதும் ஏரா...









