டாக்டர் ராமதாஸ் பேரன் நடிக்கும் குறும்படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள்..!
புகை பிடிக்கும் காட்சிகள் இருக்கக்கூடாது என்று சினிமாக்காரர்களுக்கு எதிராக போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக வாரீசு நடிக்கும் குறும்படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. டாக்டர் ராமதாசின் பேரன் நடிக்கும் குறும்படம் தொடர்பான முன்னோட்ட காட்சிகளில் ஹீரோ சுருட்டு பிடிப்பதுபோலகாட்சிகள் இடம்பெற்றுள்ளது. சிகரெட் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாமக விஐபிக்கள் இந்த காட்சிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்.
பிரபல அரசியல் குடும்பத்திலிருந்து வரும் வாரிசுகள் தமிழ் சினிமா உலகில் கால்பதித்து சாதிப்பது புதிதல்ல. இவர்களுக்கு சினிமா நுழைவு சற்று எளிதாக இருக்கலாம் அனால் இவர்கள் மீது உருவாகும் மாபெரும் எதிர்பார்ப்பை இவர்கள் பூர்த்திசெய்வது பெரும் சவாலாக இருக்கும். டாக்டர் ராமதாஸ் அவர்களின் பேரன் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸின் ஒன்று விட்ட சகோதரனுமான(cousin) குணாநிதி,...








