நிபுணன் மகிழ்ச்சியில் பிரசன்னா..!
பல நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது சினிமாவிற்கு என்றும் ஆரோக்கியமான விஷயமாகும். ஆனால் அவ்வாறு நடிப்பதற்கு நடிகர்களுக்கு பெருமளவு தன்னம்பிக்கை அவசியம். இது போல் பிற நட்சத்திரங்களோடும் சேர்ந்து நடித்து வெற்றிகளை சுவைத்தவர் நடிகர் பிரசன்னா. Action king அர்ஜுன் உடன் இணைந்து இவர் நடித்துவரும் ஜூலை 28ஆம் தேதி வெளி வர உள்ள படம் "நிபுணன்". இது அர்ஜுனின் 150வது படமாகும். அர்ஜுன் மற்றும் பிரசன்னாவுடன் , வரலக்ஷ்மி சுருதி ஹரிஹரன் மற்றும் வைபவ் போன்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'நிபுணன்' குறித்து பிரசன்னா பேசுகையில், ''இப்படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் எனது நீண்ட நாள் நண்பர். 'நிபுணன்' ஒரு சராசரி போலீஸ் திரில்லர் படம் கிடையாது. 'நிபுணன்' படத்தின் திரைக்கதையையும் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் மிக அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் இயக்குனர் அமைத்...









