சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் வெளியிட்ட’டெஸ்ட்’ பட சித்தார்த் “அர்ஜூன்” கதாபாத்திர அறிமுக வீடியோ!
நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம் அறிமுகம்: மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு கிரிக்கெட் வீரர் எப்படியான சவால்களை எதிர்கொள்கிறார் என்பதை சித்தார்த்தின் அர்ஜூன் கதாபாத்திரம் சொல்கிறது!
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கும் ’டெஸ்ட்’ படத்தில் நடிகர் சித்தார்த்தின் அர்ஜூன் கதாபாத்திர அறிமுக வீடியோவை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் வெளியிட்டுள்ளார்.
சிலருக்கு கிரிக்கெட் ஒரு விளையாட்டு, பலருக்கு அது ஒரு ஆர்வம். ஆனால், அர்ஜுனுக்கு அது வாழ்க்கை! திறமையான நடிகரான சித்தார்த் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கிரிக்கெட் வீரர் கதாபாத்திரம் லட்சியம், தியாகம் மற்றும் இடைவிடாத முயற்சி ஆகியவற்றைக் கொண்டது. அர்ஜூன் மைதானத்தில் அடியெடுத்து வைக்கும்போது கிரிக்கெட் பேட்டை மட்டும் எடுத்து செல்லவில்லை. ஒரு நாட்டின் எதிர்பார்ப...









