நெருப்புடா விமர்சனம்
நெருப்புடா விமர்சனம்
கோடங்கி
வேலை என்று செய்தால் அது `தீயணைப்பு வீரர்’ பணிதான் என்ற லட்சியத்தை கொண்ட இளைஞன்தான் விக்ரம்பிரபு இவரது நண்பர்கள் 4 பேரும் இவரோடு கைகோர்க்கிறார்கள். இந்த ஐவர் குழு சொந்தமாக தீயணைப்பு வாகனம் ஒன்றை வைத்துக் கொண்டு தீ பிடிக்கும் இடங்களுக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியை செய்கிறார்கள். தீயணைப்பு துறையில் சேருவதற்கு முயற்சிக்கிறார்கள். இதற்காக தேர்வு எழுத காத்திருக்கிறார்கள். தேர்வுக்கு முதல் நாள் இரவு ஒரு எதிர்பாராத சம்பவம் இந்த 5 பேரில் ஒருவருக்கு நடக்கிறது. அதன் மூலம் ஏற்படும் திருப்பங்களால் இவர்கள் தேர்வு எழுதினார்களா, இவர்கள் லட்சியம் வெற்றி பெற்றதா... அந்த சம்பவத்தால் ஹீரோவுக்கு என்ன பாதிப்பு என்பதை எல்லாம் சொல்கிறது நெருப்புடா படம்.
சென்னை சிலேட்டர்புரத்தைச் சேர்ந்தவர்கள் விக்ரம்பிரபுவும் அவரின் நான்கு நண்பர்கள...









