‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!
'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி' படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!
'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் - இயக்குநர் ஹனு ராகவபூடி - மைத்ரி மூவி மேக்கர்ஸ் - டி-சீரிஸ் கூட்டணியில் தயாராகி, பான் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள 'ஃபௌஜி' திரைப்படத்திலிருந்து, 'ஃபைல் நம்பர் 25' என்ற பெயரில் சக்திவாய்ந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட முன்னோட்டம் வெளியாகியுள்ளது. தேசபக்தியின் காவியக் கதையாகத் தயாராகியுள்ள இந்தத் திரைப்படம் 2027 மார்ச் 19ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
படைப்பாற்றல் மிக்க திரைப்பட இயக்குநரான ஹனு ராகவபூடி இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், டி-சீரிஸ் நிறுவனம் வழங்கும் பிரம்மாண்டமான பீரியட் ஆக்ஷன் திரைப்படமான 'ஃபௌஜி'யில், 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் இதுவரை ஏற்றிராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தைத் தயா...









