ஜாக்கி விமர்சனம் 3.5/5
ஜாக்கி விமர்சனம் 3.5/5
மதுரை பகுதிகளில் நடக்கும் கிடா சண்டைகள்,அவற்றில் கிடைக்கும் வெற்றி தோல்விகள், அதன் பின்விளைவுகள் ஆகியனவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜாக்கி.
ஆட்டோ ஓட்டுநரான நாயகன் யுவன் கிருஷ்ணா, கிடா சண்டை மீது அதிக ஈடுபாடு உள்ளவர். பணக்காரரான வில்லன் ரிதன் கிருஷ்ணா கிடா சண்டையைக் கவுரவமாக நினைப்பவர். யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிருஷ்ணாவின் கிடாயை வீழ்த்துகிறது.அதனால் நாயகன் மீது பகை பாராட்டுகிறார் வில்லன். இதனால், இருதரப்புக்கும் இடையே அடிக்கடி அடிதடி நடக்கிறது. கிடா சண்டையால் ஏற்பட்ட பகைக்கு, அதே கிடா சண்டை போட்டி மூலம் முற்றுப்புள்ளி வைக்க ஊர்ப்பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள்.அப்போட்டி நடந்ததா? அதன் முடிவு என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைதான் படம்.
மதுரை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நடக்கும் கிடா சண்டை போட்டியை மையப்படுத்திய கதையை மிக யத...









