தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படம் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் !!
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன், மீண்டும் திரைக்கு வருகிறது.
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரும் ஸ்டாராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகிறார். அவரின் பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் , பிளாக்பஸ்டர் திரைப்படமான “படையப்பா” படம் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளது.
1999 ஆண்டில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர்...
படத்திற்கு தலைப்பு வைத்ததே கதாநாயகி தான் : 'ரெட் லேபில்' படத்தயாரிப்பாளர் வெளிப்படையான பேச்சு!
இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்.
சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.
நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடிக்க,தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த 'ரெட் லேபில்' படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநர்...
இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட மாயபிம்பம் படத்தின் போஸ்டர்!
செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் மாயபிம்பம். புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
புதுமுக நடிகர் - நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களே. படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர்.
2005ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி அவர்கள் வெளியிட்டு, படத்தின் ஒரு பாடலையும் பார்ததுவிட்டு படக்குழுவை பாராட்டினார்....
’சாவீ’ திரைப்பட விமர்சனம் 3/5
நாயகன் உதய தீப், தனது தந்தையை தன் இரண்டு மாமன்கள் தான் கொலை செய்ததாக நினைத்து அவர்கள் மீது கோபமாக இருக்கிறார். அதே சமயம், மாமன் மகளை காதலிக்கவும் செய்கிறார். இதற்கிடையே, அவரது ஒரு மாமன் விபத்தில் இறந்து விடுகிறார். துக்க வீட்டில் அசதியில் அனைவரும் தூங்கி விட, பிணம் காணாமல் போகிறது. காணாமல் போன பிணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்குகிறது.
குடும்ப உறுப்பினர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொள்ளும் நிலையில், நாயகனின் மற்றொரு மாமனும் இறந்து விடுகிறார். இந்த தொடர் மரணங்களின் பின்னணி மற்றும் காணாமல் போன பிணம் என்ன ஆனது, என்பதை பிளாக் காமெடி ஜானரில் சொல்வதே ‘சாவீ’.
சாவு வீடு என்ற தலைப்பை ’சாவீ’ என்று மாற்றியிருக்கிறார்கள். புதிய தலைப்புக்கும் கதைக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதது போல் தான், இயக்குநர் என்ன சொல்ல வருகிறார், என்பது ஆரம்பத்தில் ...
’நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்பட விமர்சனம் 3/5
நாயகன் கார்த்தீஸ்வரன், பல வழிகளில் மோசடி செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார்.
போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் தப்பித்தாரா? , அவர் செய்த மோசடிகள் என்ன ? அதை அவர் எப்படி சாமர்த்தியமாக செய்கிறார், அவர் இப்படி செய்வதற்கு என்ன காரணம் ?, ஆகிய கேள்விகளுக்கான விடை தான் படத்தின் கதை.
படத்தை இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அப்பாவி முகம், சாதுவான தோற்றம் என்று சாதாரணமாக வலம் வரும் கார்த்தீஸ்வரன் செய்யும் மோசடிகள் அனைத்தும், அடங்கப்பா....ரகங்களாக அதிர்ச்சியளிக்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி கம்பீரமாகவும், அழகோடும் வலம் வருகிறார்...