நான் தான் ஜெயலலிதாவின் மகள்: உரிமை கோரி பெங்களூர் பெண் அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது எப்படி பரபரப்புடன் அவரது செய்கைகள் இருந்ததோ அதே போல அவர் மரணத்திற்கு பிறகும் அவர் குறித்த செய்திகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை என்கிற அளவுக்கு பரபரப்புகள் வந்து கொண்டேதான் இருக்கிறது.
மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் ஜெ தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோரி உரிமை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதாவும் (வயது 38) ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரியுள்ளார்.
ஜெயலலிதா தன் சொந்த தாய் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய அம்ருதா, இதுகுறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், ஜெயலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜெய...








