கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
GM Morgan Films தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவை அம்சங்களை உள்ளடக்கிய வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 16-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழு பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து, தங்களது அனுபவங்களையும் படத்தின் உருவாக்கம் குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில்…தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன் பேசியதாவது..,
உங்கள...









