“‘1947- ஆகஸ்ட் 16” இதயத்தை தொடும் ஒரு நேர்மையான கதை – தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ்
A.R. Murugadoss Productions நிறுவனம் Purple Bull Entertainment நிறுவனத்துடன் இணைந்து வழங்க,
கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “1947 ஆகஸ்ட் 16” !
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களை இயக்குவது தொடங்கி பாலிவுட்டில் அமீர் கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோருடன் இணைந்து பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்தது வரை, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எனும் பெயர் இந்திய அளவில் பெரும் புகழ் பெற்றது.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குநராக மட்டுமன்றி அவரது நிறுவனத்தின் மூலம், சில திரைப்பட இயக்குனர்களுக்கு ஒரு பிரகாசமான அறிமுகத்தை உருவாக்கி, இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தினார்.
அவர் பல ஆண்டுகளாக மறக்கமுடியாத பல திரைப்படங்களை கொடுத்துள்ளார்,
அவரது முதல் தயாரிப்பு, Fox Star Studios உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
பல்வேறு களங்களிலான உள்ளடக்கம் மற்றும் தனித்துவமான கதைகளை உருவா...









