வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

விழா மேடையில் அறை விட்ட சம்பவம் மன்னிப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்!

விழா மேடையில் அறை விட்ட சம்பவம் மன்னிப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது இந்த நிலையில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அவர் நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகையின் கணவரும் ஹாலிவுட் நடிகருமான வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கி...
இந்தியாவிடம் மீண்டும் கையேந்தும் இலங்கை அரசு!

இந்தியாவிடம் மீண்டும் கையேந்தும் இலங்கை அரசு!

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்த இலங்கையின் பொருளாதாரம், கொரோனா தொற்றால் 90 சதவீத பாதிப்புக்கு உள்ளானது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது. மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் திகைத்து திண்டாடி வருகின்றனர்.  எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நிலக்கரி வாங்குவதற்கு கூட நிதி இல்லாததால், மின் உற்பத்தி முடங்கி உள்ளது. தினசரி பல மணி நேர மின்வெட்டு உள்ளது. இலங்கைக்கு இந்தியா உதவிக் கரம் நீட்டி வரும் நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம்  ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கேட்டிருந்தது. இதற்காக இலங்கை நிதியமைச்சர் பாசில் ராஜபக்சே கடந்த சில தினங்களுக்கு ...
உக்ரைன் மரியுபோலில் “,பயங்கர பேரழிவு” ரஷியா தாக்குதலில் தஞ்சம் அடைந்த 5,000 பேர் பலி!

உக்ரைன் மரியுபோலில் “,பயங்கர பேரழிவு” ரஷியா தாக்குதலில் தஞ்சம் அடைந்த 5,000 பேர் பலி!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா 34-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படைகளின் தாக்குதல் காரணமாக மரியுபோலில் இதுவரை 5,000 பேர் பலியானதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. தியேட்டரில் தஞ்சம் புகுந்த ஏராளமானோர் இந்த தாக்குதலில் பலியானார்கள்.   உக்ரைனில் ரஷிய படைகளின் தொடர் தாக்குதல்களால் துறைமுக நகரான மரியுபோல் அழிவின் விளம்புக்கு சென்றுள்ளது என்றும், அந்த நகரில் சுமார் 5,000 பேர் இதுவரை பலியாகி உள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது...
ரஷிய நவீன ராக்கெட் தாக்குதல்களால் உக்ரைனில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு!

ரஷிய நவீன ராக்கெட் தாக்குதல்களால் உக்ரைனில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு!

HOME SLIDER, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
உக்ரைன் மீதான ரஷிய போர் இரண்டாவது மாதமாக நடந்து வருகிறது. இந்தப் போரில் ராணுவ கட்டமைப்புகளைத் தாண்டி பொதுமக்களையும் குறிவைக்கும் வகையில் அடுக்கு மாடி குடியிருப்பு, ஆஸ்பத்திரிகள், பிரசவ ஆஸ்பத்திரிகள், குண்டுவீச்சு தவிர்ப்பு பதுங்குமிடங்கள் என ரஷிய படைகள் தாக்குதல் தொடுத்து வருகின்றன. தலைநகர் கீவ், மரியுபோல், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் கனவு கைகூடாத நிலையில், பிற நகரங்களை ரஷிய படைகள் தொடர்ந்து குறி வைக்கின்றன. உக்ரைன் மீதான போரின் முதல் கட்டம் முடிந்து விட்டதாகவும், கிழக்கு உக்ரைன் மீது கவனத்தை செலுத்தப்போவதாக அறிவித்தபோதும், ரஷியா அதை இன்னும் செயல்படுத்த வில்லை. இந்தநிலையில் போலந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அங்குள்ள வார்சா நகரில் ரஷிய மக்களுக்கு அவர்களது தலைவர் புதின் பற்றி பேசினார். அப்போது அவர், “கடவுளின் பொருட்டு இந்த மனிதர் (புதின்) அதிகாரத்தில் ...
போரால் தகவல் தொடர்பு சேவை முற்றிலும் செயலிழந்த உக்ரைன்!

போரால் தகவல் தொடர்பு சேவை முற்றிலும் செயலிழந்த உக்ரைன்!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த மாதம் 24ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சிக்கி சீர்குலைந்துள்ளன. இந்நிலையில், ரஷியா போர் தொடுத்ததன் விளைவாக, உக்ரைனின் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான யுகேஆர் டெலிகாம் கடும் செயலிழப்பைச் சந்தித்துள்ளது. இது தொடர்பாக கீவ் நகர அரசு அதிகாரிகள் கூறுகையில், உக்ரைனில் தகவல் தொடர்பு சேவை கடுமையாக செயலிழந்துள்ளது. இதற்கு சைபர் தாக்குதல் காரணமா என விசாரித்து வருகிறோம்....
5 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு துபாயிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

5 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு துபாயிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசுமுறை பயணமாக கடந்த 24-ம் தேதி மாலை துபாய் சென்றார். அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகத்துக்கு சென்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின், அங்கு நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில் தமிழகத்திற்கான அரங்கை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, துபாயில் உள்ள ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரது முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன. துபாயில் இருந்து அபுதாபி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து உரையாடினார். அவரது முன்னிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாலையில் அபுதாபியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு ...
பணத்தை கொண்டு வரவில்லை, மக்களின் மனத்தையே எடுத்து வந்திருக்கிறேன்- அபுதாபியில் முதல்வர் ஸ்டாலின்

பணத்தை கொண்டு வரவில்லை, மக்களின் மனத்தையே எடுத்து வந்திருக்கிறேன்- அபுதாபியில் முதல்வர் ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள், தமிழக அரசியல்
  அபுதாபியில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில், இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் சமூகம் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-   நான்கு நாட்களாக துபாயிலும், இந்த அபுதாபி பகுதியிலும் நான் ஒரு சுற்றுப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். தமிழகத்திலே தான் சுற்றுப் பயணம் நடத்துவது எனக்கு வழக்கம். அவர்கள் அழைத்த இடங்களுக்கு எல்லாம் நான் போவது  உண்டு. அப்படி அழைக்கப்பெறும் இடங்களிலெல்லாம் எனக்கு வரவேற்புக்களை மகிழ்ச்சியோடு, உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு அவர்கள் என்னை வரவேற்பது உண்டு. அதற்குக் கொஞ்சம் கூட குறைவில்லாமல், கொஞ்சம் கூட இல்லை, ஒரு இன்ச் கூட குறைவில்லாமல், இந்த நான்கு நாட்களாக நான் திக்குமுக்காடிப் போயிருக்கிறேன். தமிழ்நாட்டை நோக்கி பல தொழில் நிறுவனங்களை ஈர்ப்ப...
பாலா இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி!

பாலா இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இயக்குநர் பாலா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவுக்கு நந்தா படத்தின் மூலம் சரியான திசையை காட்டியவர் இயக்குநர் பாலா. நந்தாவுக்கு பிறகே சூர்யா என்ற நடிகர் தனித்தன்மையுடன் வெளிப்பட ஆரம்பித்தார். இதையடுத்து பாலாவின் பிதாமகன் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார் சூர்யா. பின் பாலா தயாரித்த மாயாவியிலும் சூர்யா நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். பின்னர் பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து மாஸ் ஹீரோவானார் சூர்யா. பாலாவை பொறுத்தவரை அவன் இவன், தாரை தப்பட்டை என்று அடுத்தடுத்து சுமாரான படங்கள் தந்து ஜோதிகாவை வைத்து நாச்சியார் படத்தை இயக்கி, தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆனால் அவருக்கு அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா பெரு...
யுவன் ஷங்கர் ராஜா வெளிநாட்டில் ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல்!

யுவன் ஷங்கர் ராஜா வெளிநாட்டில் ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
வெளிநாட்டில் யுவன் ஷங்கர் ராஜா ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. 1997-ம் ஆண்டு அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன். தமிழின் மூத்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகனாக இருந்தபோதிலும் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தார். இன்றைய இளைஞர்கள் பலருக்கும் ஃபேவரிட் இசையமைப்பாளராக வலம் வருகிறார் யுவன். தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் பாடல் ஆதாரமாக அமைந்துள்ள போதும், அவரின் பின்னணி இசை தனி சிறப்பு மிக்கதாக கொண்டாடப்படுகிறது. தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்திருப்பது யுவன்சங்கர் ராஜாவின் தனிசிறப்பு. இயக்குனர்கள் அமீர், செல்வராகவன், ராம், வெங்கட் பிரபு, தியாகராஜன் குமாரராஜா என பல இயக்குனர்களும் யுவன் சங்கர் ராஜா இசை இல்லாமல் தங்களால் திரைப்படம் இயக்கவே முடியாது என பல மேடைகளி...
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் அடுத்த மிஷன் ஆரம்பமாகிறது!

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் அடுத்த மிஷன் ஆரம்பமாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் அடுத்த மிஷன் ஆரம்பமாகிறது ! பன் மொழிகளில் பிரபலமான இந்திய நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டா, கலக்கல் கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இருவரும் தற்போது அவர்களின் கூட்டணியில், பன் மொழிகளில் உருவாகிய இந்தியா படமான ‘லைகர்’ வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள், இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இந்த அதிரடியான கூட்டணியில், புதிய படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் பல வெடிபொருள் ஆயுதங்களுன் படு ஸ்டைலீஷாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில்: 14:20 மணிநேரம்- 19.0760° N, 72.8777° E - அடுத்த மிஷன் வெளியீடு 29-03-2022. என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு பெரிய விருந்து காத்திருக்கிறது,...