HOME SLIDER
இ – பாஸ் முறை, தனிமைப்படுத்துதல், வீடுகளில் ஸ்டிக்கர் உள்ளிட்ட அனைத்து விதிகளையும் அடியோடு ரத்து செய்தது கர்நாடக அரசு!
*இ - பாஸ் முறை, தனிமைப்படுத்துதல், வீடுகளில் ஸ்டிக்கர் உள்ளிட்ட அனைத்து விதிகளையும் அடியோடு ரத்து செய்தது கர்நாடக அரசு!!*
பெங்களூரு: மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி கர்நாடக மாநில அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்துள்ளது. மேலும் இடம்பெயர்வோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் கைவிட்டுள்ளது.
இது குறித்து, கர்நாடக மாநில அரசின் குடும்பம் மற்றும் சுகாதார துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தார் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்திற்கு வெளி மாநிலத்தில் இருந்து வருகிற நபர்கள் சேவா சிந்து என்ற செயலியில் பதிவு செய்து இ-பாஸ் பெற வேண்டும், விமானம் மற்றும் ரோடு வழியாக வந்தால் மருத்துவ பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும்,
மாநில எல்லைகளில் வாகனங்களை பரிசோதித்தல், இடம் பெயர்வோர் கையில் முத்திரை குத்தப்படுவது,தனிமைப்படுத்தபடுவோர் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படுதல்,14 நாள் தனிமையில் இருப்பது உ...
சூர்யாவின் சூரரைப்போற்று டிஜிட்டல் வியாபாரம் இத்தனை கோடியா? எக்ஸ்குளூசிவ் சுவாரஸ்ய தகவல்!
https://youtu.be/n-vJbDc797k
வீட்டுக்குள் வயதானவர்களை வைத்து தகர ஷீட்டால் மூடி மனித உரிமை மீறிய பல்லாவரம் நகராட்சி!
பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளின் அப்பட்டமான மனித உரிமை மீறல் !?
குரோம்பேட்டை, புருஷோத்தமன் நகரில் அமைந்துள்ளது பாதல் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் 14நாட்கள் கோரோனா சிகிச்சை பெற்று இன்று மதியம் நலமுடன் வீடுதிரும்பினார். இன்று மாலை பல்லாவரம் நகராட்சி ஆனையரின் உத்திரவின்படி அந்த வளாகத்தில் ஒரு பகுதி வாயிலை அடைக்க வந்தார்கள். அப்போது குடியிருப்போரின் போராட்டத்தினால் அந்த வீட்டின் வாயிலை மட்டும் அடைத்தார்கள்.
எல்லோரும் கெஞ்சியும் கெட்காத ஊழியர்கள் யாரும் வெளியே வரமுடியாது வகையில் அடைத்து விட்டார்கள். அந்த வீட்டில் சிரிது நாட்கள் முன் தான் ஒரு முதியவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. இப்படி நகராட்சி இறக்கம் இன்றி நடந்தால் என்ன செய்வது. திடிரென்று அந்த முதியவருக்கு உடம்பு சரியில்லை என்றால் எப்படி மருத்துவ மனைக்கு செல்வார்கள்.
இந்த அரசாங்கம் மக்கள் நலனுக்காகவா அல்ல...
இப்போதைக்கு தியேட்டர்கள் திறக்க வாய்ப்புகள் இல்லை – தமிழக அரசு
இப்போதைக்கு தியேட்டர்கள் திறக்க வாய்ப்புகள் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
கொரோனா ஊரடங்கிற்குப்பிறகு கடந்த மே மாதத்தில் இருந்து மத்திய அரசு படிப்படியாக தளர்வுகள் அளித்து வருகிறது. பெரும்பாலானவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 10-ந்தேதி உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
வரும் 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி வழங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில் ‘‘மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு இல்லை. கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர்தான் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். குறைந்த ரசிகர்களுடன் தியேட்டர்கள் திறக்கப...
ரைசா வில்சன் மீண்டும் நாயகியாக நடிக்கும் காமெடி த்ரில்லர் படம்!
*கார்த்திக் ராஜு இயக்கத்தில் மீண்டுமொரு த்ரில்லர்! - நாயகியாக ரைசா வில்சன்!*
கொரோனா என்ற வார்த்தை அனைவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், சிலர் கொரோனா காலத்தையே தங்களுக்கு சாதகமாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் இயக்குநர் கார்த்திக் ராஜுவும் ஒருவர். கொரோனா அச்சுறுத்தலா அவர் இயக்கி வந்த 'சூரப்பனகை' படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பரபரப்பாக ஓடிக்கொண்டே இருந்த கலைஞர்களுக்கு எப்போதுமே சும்மா வீட்டில் உட்கார்ந்திருப்பது பிடிக்காது.
கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன், குறைந்த குழுவினர் கொண்டு பணிபுரியும் வகையில் கதையொன்றை யோசித்து எழுதினார் கார்த்திக் ராஜு. அது நல்லதொரு த்ரில்லராக முடியவே, 'சூர்ப்பனகை' தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மாவும் நானே தயாரிக்கிறேன் என்று கூறவே உடனடியாக தொடங்கி முடித்தும் விட்டார்கள். கொரோனா காலத்தில் உருவா...
செப்டம்பரில் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி கிடைக்குமாம்!
செப்டம்பரில் மெட்ரோ ரயில் இயங்க அனுமதி கிடைக்குமாம்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஜூன் 1-ந் தேதியில் இருந்து மாதந்தோறும் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
4-ம் கட்ட தளர்வுகள், செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த தளர்வுகளை இவ்வார இறுதியில் மத்திய அரசு அறிவிக்கிறது.
இந்நிலையில், 4-ம் கட்ட தளர்வுகள் எப்படி இருக்கும் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
4-ம் கட்ட தளர்வின்போது, நாடு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், அந்தந்த மாநில அரசுகள், அங்குள்ள கொரோனா சூழ்நிலையை பொறுத்து, மெட்ரோ ரெயிலை இயக்குவது பற்றி இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம்.
பள்ளி, கல்லூரிகளை திறக்க இப்போதைக்கு அனுமதி அளிக்கப்படாத...
தமிழகத்திலும் இ-பாஸ் ரத்தா?! 29ம் தேதி முதல்வர் முக்கிய முடிவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறையாமல் நீடிக்கிறது. எனவே மக்களுக்கான பொது போக்குவரத்தை கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் அரசு தடை செய்துள்ளது. மிகவும் அவசியம் என்றால் மட்டும் இ-பாஸ் பெற்று வேறு மாவட்டங்களுக்கு செல்ல அரசு அனுமதி அளித்தது.
ஆனாலும் இ-பாஸ் பெறுவதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவசிய காரணங்களுக்கும் இ-பாஸ் மறுக்கப்படுகிறது என்றும், அதில் முறைகேடுகள் உள்ளதாகவும் புகார்கள் கூறப்பட்டன. எனவே இ-பாஸ் வழங்குவதில் தளர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், வியாபாரிகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த உத்தரவு கடந்த 17-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில...
கடல் நீரை மேகம் உறுஞ்சும் அதிசயம் அமெரிக்காவில்…!
அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய காட்சி வெளியாகி உள்ளது.
லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா பகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்கள் கடலில் பேரதிசயத்தைக் கண்டனர்.
ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்று இந்தக் காட்சி இருந்ததாக இதனைப் படம் பிடித்தவர்கள் தெரிவித்துள்ளனர்....
வாகன ஆவணஙகளையும், டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கவும் டிசம்பர் 31வரை கால அவகாசம்
வாகன ஆவணஙகளையும், டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கவும் டிசம்பர் 31வரை கால அவகாசம் வழஙகி உள்ளது மத்திய அரசு!
கொரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகு காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மத்திய அரசு நீட்டித்து வருகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதிவரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்களில் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று சூழல் இன்னும் முழுமையாக நீங்காததால், இதை கருத்தில் கொண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது....

