வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

புற்று நோய் ஆராய்ச்சிக்கு சம்பள பணத்தை கொடுத்து உதவிய பிரபல நடிகர்!

புற்று நோய் ஆராய்ச்சிக்கு சம்பள பணத்தை கொடுத்து உதவிய பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
புற்று நோய் ஆராய்ச்சிக்கு சம்பள பணத்தை கொடுத்து உதவிய பிரபல நடிகர்! 1999-ம் ஆண்டு வெளியாகி உலக ரசிகர்களை கவர்ந்த ஹாலிவுட் திரைப்படம் `தி மேட்ரிக்ஸ்'. சயின்ஸ் பிக்சன் கதையாக வெளிவந்து வசூல் ரீதியாக பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தில் நடித்ததின் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் கியானு ரீவ்ஸ். இதன் தொடர்சியாக மேட்ரிக்ஸ் பட வரிசையில் அடுத்த பாகமான ‘தி மேட்ரிக்ஸ் ரிசெரக்‌ஷன்’ என்ற படமும் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடித்ததற்காக  கியானு ரீவ்ஸிற்கு கிடைத்த சம்பளத்தில் 70 சதவீதத்தை லுகேமியா / ரத்தப் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு தரவுள்ளார். கியானு ரீவ்ஸின் தங்கை கிம் கடந்த 10 வருடங்களாக புற்றுநோயை எதிர்த்து போராடி வந்த நிலையில், லுகேமியா ஆராய்ச்சிக்கு நன்கொடை அளிக்க அவர் முன...
சட்டப்பேரவையை அவமதிக்கும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறோம்” – விடுதலைச் சிறுத்தைகள்

சட்டப்பேரவையை அவமதிக்கும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறோம்” – விடுதலைச் சிறுத்தைகள்

Assembly news, HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சட்டப்பேரவையை அவமதிக்கும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறோம்” விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு “ அனைத்துக்கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய The Undergraduate Medical Degree Courses Bill, 2021 ஐ, குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் சட்டப் பேரவையை மேதகு ஆளுநர் சிறுமைப்படுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசையும் அதைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்களையும், அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதிக்கிற ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புறக்கணித்து வெளிநடப்புச் செய்கிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்...
மின்னல் வேகத்தில் பரவும் 3-வது அலை: இந்தியாவில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

மின்னல் வேகத்தில் பரவும் 3-வது அலை: இந்தியாவில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  மின்னல் வேகத்தில் பரவும் 3-வது அலை: இந்தியாவில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பும் நாள்தோறும் உயர்ந்து வருகிறது. முக்கிய நகரங்களில் தொற்று மின்னல் வேகத்தில் பரவுவது 3-வது அலை தொடங்கி விட்டதை காட்டுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கேற்றார்போல் ஒரு வாரம் முன்பு 6 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு, நாள்தோறும் உயர்ந்து இன்று 58 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 58,097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 37,379 ஆக இருந்தது. நேற்று ஒரேநாளில் சுமார் 56 சதவீதம் பாதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 50 லட்சத்து 18 ஆயிரத்து 358 ஆக அதிகரித்துள்ளது. நேற்று...
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் சுவீடன் மன்னர், ராணி இருவருக்கும் கொரோனா!

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் சுவீடன் மன்னர், ராணி இருவருக்கும் கொரோனா!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சுவீடன் மன்னர், ராணி இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அந்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்ற்படுத்தி உள்ளது. சுவீடன் நாட்டு மன்னர் கார்ல் குஸ்டாப் (வயது 75). ராணி சில்வியா (78). இவர்கள் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து அரண்மனை சார்பில் கூறும்போது, மன்னர், ராணிக்கு லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருவரும் நன்றாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவீடன் மன்னர், ராணி, இருவரும் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசியும், கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ...
ஸ்பா, மசாஜ் அறைகளில் கேமரா… உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி கருத்து!

ஸ்பா, மசாஜ் அறைகளில் கேமரா… உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி கருத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஸ்பா, மசாஜ் அறைகளில் கேமரா... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி கருத்து! ஸ்பா, மசாஜ் நடைபெறும் அறைகளில் CCTV கேமராக்களை பொருத்தி கண்காணிப்பது, தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த பயேல் பிஸ்வாஸ், குயின் ஆயுர்வேதிக் ஸ்பா செண்டர் எனும் பெயரில் ஸ்பா மையம் நடத்த அனுமதிக்கக் கோரி NOC சான்றிதழ் வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. ஸ்பா மையம் தொடங்குவதை முறைப்படுத்துவதற்கான விதிகள் ஏதுமில்லை. ஸ்பா தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்குவதோடு காவல்துறையினரின் தலையீட்டை தவிர்க்கவும் மனுவில் கோரியுள்ளார். கடந்த ஆண்டு  இது போன்ற வேறு ஒரு வழக்கில் , உயர்நீதிமன்ற நீதிபதி விசாரித்து உத்தரவு...
பக்தர்களுக்கு கொரானா உறுதியானதால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் மீண்டும் மூடப்படுமா?

பக்தர்களுக்கு கொரானா உறுதியானதால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் மீண்டும் மூடப்படுமா?

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் தேவையில்லாமல் பொது இடங்களில் கூட வேண்டாம் எனவும், வெளியில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதனை கண்டு கொள்ளாமல் பொது இடங்களில் அதிகளவில் கூடி வருகிறார் கள். குறிப்பாக கோவில்களில் சாமி தரிசனத்துக்கு கூட்டம் அதிகரிக்கிறது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கபட்டினத்தில் இருந்து 3 பஸ்களில் தமிழகத்துக்கு சுற்றுலா வந்த 100 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்து விட்டு தங்கள் மாநிலத்துக்கு திரும்பி உள்ளனர். ஒவ்வொரு பஸ்களில் 35 பேர் வரை இருந்துள்ளனர். கர்நாடகாவில் அந்த மாநில அரசும் கொரோனா பரவலை தடுக்க தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மேல்மருவத்தூரில் இருந...
மூன்று மொழிகளில் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ இந்தி மற்றும் தெலுங்கு  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

மூன்று மொழிகளில் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ இந்தி மற்றும் தெலுங்கு  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மூன்று மொழிகளில் வெளியாகும் ‘வலிமை’ இந்தி மற்றும் தெலுங்கு  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்! அஜித்தின் மிரட்டலான  நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பைக் ரேஸிங் குற்றங்களை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக கார்த்திகேயாவும், கதாநாயகியாக ஹுமா குரேஷியும் நடித்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வலிமை அப்டேட் என்ற வார்த்தை கூட டிரண்டிங்கில் இருந்தது. இந்த சூழலில் வலிமை டீசர் வெளியாகி பெரும் வர்வேற்ப்பை பெற்றது. யுவனின் இசையில் வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் பொங்கல் ரிலீசாக வலிமை வருவதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். அதோடு தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் படம் ரிலீஸ் ஆவதால் இன்னும் சந்தோ...
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டன!

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டன!

HOME SLIDER, politics, செய்திகள்
  தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டன ஓராண்டு அடிப்படையில் தற்காலிக அமைப்பாகத்தான் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் செவிலியர் இல்லாமல் செயல்படாமலேயே இருந்தது அம்மா மினி கிளினிக்கிற்கு நியமிக்கப்பட்ட 1,820 மருத்துவர்களும் கொரோனா பணியில் உள்ளனர் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்...
கோவை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த காங்கிரஸ் நிர்வாகி!

கோவை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த காங்கிரஸ் நிர்வாகி!

HOME SLIDER, politics, செய்திகள்
கோவை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி கே.எஸ்.பி.ஏ.தாங்கல் என்பவரை பிடித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக இருப்பவர் கே.எஸ்.பி.ஏ.தாங்கல். இவர் இன்று காலை பெங்களூர் செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த போது அவரது உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர். அப்போது அவர் கொண்டு வந்த பையில் துருப்பிடித்த நிலையில் பழைய துப்பாக்கி ஒன்றும் , ஏழு தோட்டாக்களும் இருப்பது தெரியவந்தது.இதனையடுத்து அவரை பிடித்து அமர வைத்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் அவரிடம் உள்ள துப்பாக்கிக்கு உரிய அனுமதி எதுவும் இல்லாத நிலையில் இதுகுறித்து பீளமேடு காவல்துறைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை...
மாரிசெல்வராஜ்-உதயநிதி படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?

மாரிசெல்வராஜ்-உதயநிதி படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாரிசெல்வராஜ்-உதயநிதி படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?   மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதாக சொல்லப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக உதயநிதி நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிப்பு வந்தது. அரசியலில் தீவிரமாக இறங்க தீர்மானித்திருக்கும் உதயநிதி சினிமாவுக்கு தற்காலிகமாக குட்பை சொல்லப்போகிறார். தனது கடைசிப் படம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என அவர் மாரி செல்வராஜை அணுகியதாகவும், அவரும்  இயக்க ஒப்புக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அத்துடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோரும் நடிக்க உள்ளனர். மாரி செல்வராஜ், உதயநிதி இருவரது படங்களுக்கும் இதுவரை ரஹ்மான் இசையமைத்ததில்லை. மாரி செல்வராஜின் அரசியல் படங்களுக்கு ரஹ்மானின் இசை எந்தளவு ரசிகர்களை ஈர்க்கு...