வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

நயன்தாரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் சி.எஸ்.கே வீரரின் தங்கை!

நயன்தாரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் சி.எஸ்.கே வீரரின் தங்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, sports, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள், விளையாட்டு செய்திகள்
நயன்தாரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் சி.எஸ்.கே வீரரின் தங்கை! நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவர்கள் தயாரிக்கும் புதிய படம் ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் இயக்குகிறார். சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்த கேகே, இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதேபோல் பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தியும் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மல்தி சாஹர் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தீபக் சாஹரின் தங்கை...
இது பதவி அல்ல பொறுப்பு – தேர்தலில் வென்ற மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை!

இது பதவி அல்ல பொறுப்பு – தேர்தலில் வென்ற மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
இது பதவி அல்ல பொறுப்பு - தேர்தலில் வென்ற மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை! தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டத்துக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தேர்தலில் தன் படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் கண்டிப்பாகக் கூறி, தடை போட்டிருந்தார். ஆனாலும் சோர்வடையாத விஜய் ரசிகர்கள் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். தேர்தலில் நின்ற பல நிர்வாகிகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்க நிர்வாகிகளை அண்மையில் நேரில் அழைத்து பாராட்டினார் விஜய். அந்த சந்திப்பின் போது நடிகர் விஜய் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அவர்களிடம், “இது பதவி அல்ல பொறுப்பு என்பதை உ...
‘அண்ணாத்த’ கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் – ரஜினி மகள் விருப்பம்!

‘அண்ணாத்த’ கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் – ரஜினி மகள் விருப்பம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘அண்ணாத்த’ கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் - ரஜினி மகள் விருப்பம்! சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம், வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் குடும்பத்தினருடன் ‘அண்ணாத்த’ படத்தைப் பார்த்த ரஜினியின் மகள் சௌந்தர்யா. படத்தைப் பற்றி தனது ஹூட் செயலில் போட்ட குரல் பதிவில், “படம் பார்த்துவிட்டு கண்களில் கண்ணீருடன் சிவா சாருக்கு நன்றி சொன்னேன். நீங்கள் செய்திருப்பது மேஜிக் என்பதையும் தாண்டி சொல்ல வார்த்தைகள் இல்லை. தலைவரும் - நீங்களும் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும்” என்று அவர் அந்த பதிவில் கூறியிருக...
கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
கோலியின் புதிய வியூகம்: ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்! டி20 உலக கோப்பையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ரோகித் சர்மா- கே.எல். ராகுல் அல்லது இஷான் கிஷன்- கே.எல். ராகுல் ஆகியோரில் ஏதாவது ஒரு ஜோடி களம் இறங்கும் என ரசிகர்களும், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி சர்ப்ரைஸ் அளித்தது. கே.எல். ராகுல், இஷான் கிஷன் ஆகியோரை தொடக்க வீரர்களாக களம் இறக்கினார் விராட் கோலி. இது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. மேலும், நியூசிலாந்த...
இயக்குனர் அவதாரம் எடுக்கும் கார்த்தி, ஜோதிகா!

இயக்குனர் அவதாரம் எடுக்கும் கார்த்தி, ஜோதிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குனர் அவதாரம் எடுக்கும் கார்த்தி, ஜோதிகா! திரையுலகில் கருப்பு வெள்ளை காலத்திலிருந்து நடிகைகள் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தாலும் இயக்குனராக மாறுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அதில் பானுமதி, சாவித்ரி, விஜய் நிர்மலா ஆகியோர் ஒரு திரைப்பட இயக்குநர்களாக மாறியிருக்கிறார்கள். இப்போது உள்ள நடிகர்களில் சிலர்க்கு மட்டும்தான் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதில் கார்த்தி இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்தோடு இருப்பவர். இவர் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதோடு ஜோதிகாவும் தீவிர கதை விவாதத்தில் இருப்பதாகவும் இவரும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படங்களை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க இருக்கிறது....
‘இந்தியன் 2’ பட வழக்கு முடித்து வைப்பு!

‘இந்தியன் 2’ பட வழக்கு முடித்து வைப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘இந்தியன் 2’ பட வழக்கு முடித்து வைப்பு! நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 திரைப்படம் உருவானது. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்த நிலையில், திடீரென படப்பிடிப்பு பணிகள் நின்றுபோனது. இந்த நிலையில், இந்தியன்-2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் தொடர்ந்த, இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து லைகா சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லைகா நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதி நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது மத்தியஸ்த நடைமுறையில் பங்கேற்க உ...
சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்!

சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்! நடிகர் சூர்யாவின் 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நேற்று சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகர் சூர்யா, ஜெய் பீம் பட தலைப்பு குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “ஜெய் பீம் படத்தின் தலைப்பின் உரிமையை முதலில் இயக்குனர் பா.இரஞ்சித் வைத்திருந்தார். அவரிடம் சென்று கேட்டபோது, எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல், ‘ஜெய் ப...
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘மகான்’!

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘மகான்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘மகான்'! நடிகர் விக்ரமின் 60-வது படம் ‘மகான்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ‘மகான்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜகமே த...
எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி! அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும்,  எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில்  இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் பிரச்சனை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில்  இதுதொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை முடிந்த பின்னர் இன்று அவர் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது....
நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா? – வெளியான புதிய தகவல்!

நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா? – வெளியான புதிய தகவல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா? - வெளியான புதிய தகவல்! திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ரஜினிகாந்த் இந்நிலையில், ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து ...