புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

உபி சாமியார் ஆட்சியில் தொடரும் அராஜகம் ஊடகங்களுக்கு தடை போலீஸ் அத்துமீறல்

உபி சாமியார் ஆட்சியில் தொடரும் அராஜகம் ஊடகங்களுக்கு தடை போலீஸ் அத்துமீறல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    *உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம்:* *காவல்துறையினர் மிரட்டுவதாக குடும்பத்தினர் புகார்!* *ஊடகங்களுக்கு தடை* *உத்தரபிரதேசத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.* *ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க செய்தியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது.* *இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், தடைகளை தாண்டி வயல்வெளி வழியே ஓடிவந்து செய்தியாளர்களை சந்தித்தான். அப்போது தாங்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்களிடம் இருந்த செல்போனையும் கா...
யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் – ராகுல் ஆவேசம்

யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் – ராகுல் ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  யாருக்கும் தலை வணங்க மாட்டேன்: ராகுல்காந்தி ஆவேசம் உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன். பொய்யை உண்மையுடன் வெல்வேன்; பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும்- மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளையொட்டி ராகுல் காந்தி ட்வீட்....
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் அகில இந்திய தலைவர் என்றும் பாராமல் ராகுல்காந்தியை பிடித்து தள்ளி மரியாதை குறைவாக நடத்துவது, மனித உரிமைகளுக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது. ராகுல்காந்தி கைது சம்பவத்துக்கு உ.பி. முதலமைச்சர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் - மு.க.ஸ்டாலின். உ.பி.யில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உள்ளதையே காட்டுகிறது - ஸ்டாலின்....
தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தடையை மீறி கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு *அரசின் தடையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் *திருவள்ளூர் மாவட்டத்தில் கொரட்டூர் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு *100 பெண்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு
நடிகைகள் போதை பொருள் வழக்குகளில் கைதாகி வரும் நிலையில் தாதா87 விஜய்ஸ்ரீஜியின் “பவுடர்” சர்ச்சையை கிளப்புமா?!

நடிகைகள் போதை பொருள் வழக்குகளில் கைதாகி வரும் நிலையில் தாதா87 விஜய்ஸ்ரீஜியின் “பவுடர்” சர்ச்சையை கிளப்புமா?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகைகள் போதை பொருள் பயன்படுத்திய வழக்குகளில் கைதாகி வரும் நிலையில் தாதா87 இயக்குனரின் அடுத்த திகில் த்ரில்லர் படமாக உருவாகும் "பவுடர்"   தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய படம் 'பவுடர்' சாருஹாசன் நடித்த 'தாதா 87' வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன், அர்ஜூமன் கதையின் நாயகனாக நடிக்கிறார். அனித்ரா நாயர்,ஆராத்யா, சாந்தினி, சான்ட்ரியா,மொட்டை ராஜேந்திரன்,மைம் கோபி ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பவுடர் என்ற புதிய படத்தை இன்று துவங்கியுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி. வித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபலா, வையாபுரி ,ஆதவன் ஆகல்யா வெங்கடேசன், ஆகிய...
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்… தடுமாறும் இபிஎஸ்

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்… தடுமாறும் இபிஎஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்... தடுமாறும் இபிஎஸ் தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு வருகிற அக்.7ம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்து சற்றே சலசலப்பை ஓயச்செய்தார். ஆனால் மறுநாளே ஓபிஎஸ் இல்லத்தில் கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் முக்கிய தலைவர்கள் சிலர் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல் இபிஎஸ்-ஐயும் ...
உ.பி சாமியார் ஆட்சியில் மீண்டுமொரு இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த பயங்கரம்!

உ.பி சாமியார் ஆட்சியில் மீண்டுமொரு இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த பயங்கரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உ.பியில் மீண்டுமொரு பயங்கரம்: இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கடந்த 14-ம் தேதி வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரை 4 நபர்கள் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வெளியில் சொல்லிவிடுவார் எனக்கருதிய அந்த கொடூர கும்பல் இளம்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அந்த பெண், சிகிச்சை பலனின்றி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஹத்ராஸ் சம்பவம் போன்றே உத்தர பிரதேசத்தில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. பல்ராம்பூர் அருகே வேலைக்குச் சென்ற 22 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அத்துடன் அந்தப் பெ...
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *கொரோனா எதிரொலி; வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு...* *வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை, வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.* *வருமான வரிச்சட்டம் பிரிவு 139ன் படி, 2019-20 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை, 2020 மார்ச் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, இதற்கான அவகாசம் முதலில் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர், ஜூலை 31 வரையிலும், அதன் பிறகு செப்டம்பர் 30 வரையிலும் நீட்டிக்கப்பட்டது.* *இந்த அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், 4வது முறையாக அவகாசத்தை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.* *அதில், 'கொரோனா பரவலால் வருமான வரி செலுத்துவோர் எதிர் கொண்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 2019-20 கணக்...