ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

அண்டாவ காணோம் படத்தை OTT மூலம் ரிலீஸ் செய்வது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்

அண்டாவ காணோம் படத்தை OTT மூலம் ரிலீஸ் செய்வது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று அறிவித்த தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கை விவரம்: இன்றைய திரைத்துறையின் நிலை பற்றிய எனது பார்வை! OTT சமீப காலங்களாக பரவலாக பரபரப்பாக பேசப்படும் தளம். இந்த தளம் சாமான்ய தயாரிப்பாளர்களுக்கு ஆனதல்ல. பெரிய பட்ஜெட் படங்கள், மிகப் பெரிய நடிகர்கள், இப்படி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களுக்கும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தயாரிப்பாளர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகக் கூடிய வியாபாரமாக கூடிய தளமாக கூறப்படுகிறது. அதையும் மீறி ஒரு சில படங்கள் திரையிடப்படுகின்றன, அதன் உண்மை நிலை... பங்கு சதவீத அடிப்படையில் அந்த படங்கள் திரையிடப்படுகிறது. அப்படி திரையிடப்படும் படங்களுக்கு எந்தவித விளம்பரமும், வருவாயை ஈ...
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி குற்றவாளியா செப்.30ல் தெரியும்!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி குற்றவாளியா செப்.30ல் தெரியும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி குற்றவாளியா செப்.30ல் தெரியும்!   அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறி, கர சேவகர்கள் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அதை இடித்து தரை மட்டமாக்கினர். இது தொடர்பாக பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா உள்ளிட்டவர்கள் மீது உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் குற்ற வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் தனிக்கோர்ட்டு விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் 8-ந் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 32 பேரிடம் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 313-ன் கீழான விசாரணையை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நடத்தி முடித்து விட்டது....
ரூ.2.5 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் கண் கண்ணாடி!

ரூ.2.5 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் கண் கண்ணாடி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    ரூ.2.5 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் கண் கண்ணாடி! மகாத்மா காந்தி வட்ட வடிவ மூக்கு கண்ணாடி அணிவது வழக்கம். அவரது, தங்க பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி ஒன்று இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் ஹன்ஹாம் என்ற இடத்தில் உள்ள ஈஸ்ட் பிரிஸ்டல் ஆக்சன்ஸ் ஏல மையத்தில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. இந்த கண்ணாடி 10 ஆயிரம் பவுண்டு முதல் 15 ஆயிரம் பவுண்டு வரை ஏலம் போகலாம் என்று அந்த நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் அந்த மூக்கு கண்ணாடி 2 லட்சத்து 60 ஆயிரம் பவுண்டுக்கு (சுமார் ரூ.2 கோடியே 55 லட்சம்) ஏலம் போய் உள்ளது. அபூர்வமான இந்த மூக்கு கண்ணாடி நம்பமுடியாத விலைக்கு விற்பனையாகி இருப்பதாக அதை ஏலம் விட்ட ஈஸ்ட் பிரிஸ்டல் ஆக்சன்ஸ் ஏல மையத்தைச் சேர்ந்த ஆன்டி ஸ்டோவ் தெரிவித்தார். இங்கிலாந்தில் உள்ள மங்கோட்ஸ்பீல்டு என்ற இடத்த...
சூர்யாவின் சூரரைப் போற்று OTT டிஜிட்டல் தளமான அமேசான் பிரைமில் ரிலீஸ்!

சூர்யாவின் சூரரைப் போற்று OTT டிஜிட்டல் தளமான அமேசான் பிரைமில் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நேரடியாக டிஜிட்டல்: அமேசான் ப்ரைம் வீடியோ சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் வேர்ல்ட் பிரீமியரை அறிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர். சூரரைப்போற்று அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்படப்போகிறது. அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் பிரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல். பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேம...
வைரஸ் பீதியால் கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் நடத்த திட்டம்!

வைரஸ் பீதியால் கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் நடத்த திட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வைரஸ் பீதியால் கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் நடத்த திட்டம்! கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தை நடத்தலாமா என சபாநாயகர் தனபால் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டனர். கொரோனா அச்சுறுத்தலால் இடநெருக்கடி காரணமாக மாற்று இடத்தில் சட்டசபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 24க்குள...
வீட்டில் இருந்தபடியே 100 ரூபாய் செலவில்  பார்க்க வருகிறது அண்டாவ காணோம் சினிமா !

வீட்டில் இருந்தபடியே 100 ரூபாய் செலவில் பார்க்க வருகிறது அண்டாவ காணோம் சினிமா !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வீட்டில் இருந்தபடியே 100 ரூபாய் செலவில் சினிமா பார்க்க வருகிறது அண்டாவ காணோம்!   IOS , Android, Fire Stick,Smart Tv, Web Browser போன்ற‌வ‌ற்றில் எளிமையான‌ முறையில் கிடைக்கும்வ‌கையில் Jsk Prime Media புதிய‌ OTT த‌ள‌ம் அறிமுக‌மாகிற‌து. த‌ங்க‌ மீன்க‌ள், த‌ர‌ம‌னி ம‌ற்றும் எண்ண‌ற்ற‌ ப‌ட‌ங்க‌ளை தயாரித்த‌ தயாரிப்பாள‌ர் J Satish Kumar Jsk Audio ம‌ற்றும் Jsk Prime YouTube Channel வெற்றியை தொட‌ர்ந்து அவரின் அடுத்த‌ முய‌ற்சியாக JSK PRIME MEDIA OTT வெளியாகிற‌து. இதில் நீங்க‌ள் எப்போதும் பார்க்கும் வ‌கையில் 50 திரைப்ப‌ட‌ங்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ இட‌ம்பெறும்.அதில் ம‌க்க‌ள் நீங்க‌ள் விரும்பிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ளை சந்தாதார‌ர் க‌ட்ட‌ண‌மின்றி இல‌வ‌ச‌மாக‌ பார்க்க‌லாம். அதும‌ட்டுமில்லாது புத்த‌ம் புதிய‌ திரைப்ப‌ட‌ங்க‌ளும் வெளியாக‌வுள்ள‌ன‌. புதிதாக‌ வெளியாகும் திரைப்ப‌ட‌ங்க‌ளை ம‌ட்டும் அந்த‌ந்த‌...
மாரியப்பன் தங்கவேலுவுக்கு கேல் ரத்னா விருது!

மாரியப்பன் தங்கவேலுவுக்கு கேல் ரத்னா விருது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் போன்ற விருதுகள் வழங்கப்படும். அதன்படி இந்தாண்டு விருது வாங்குவோர் பட்டியலில் 500க்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் மற்றும் கேல் ரத்னா விருது பெறுவோரின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய விளையாட்டு வீரர்கள் 5 பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவித்துள்ளது. இந்த விருது பெறுவோரில், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக தடகள வீரர் மாரியப்பனுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது...
ஸ்ரீசைலம் அணையை ஒட்டி உள்ள நீர்மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து

ஸ்ரீசைலம் அணையை ஒட்டி உள்ள நீர்மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையை ஒட்டி உள்ள நீர்மின் நிலையத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். தீ சூழ்ந்ததால் சில ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் 6 பேருக்கு மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் 9 பேர் மின் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிய உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். இதுபற்றி தெலுங்கானா அமைச்சர் ஜி.ஜகதீஷ்வர் ரெட்டி கூறுகையில் ‘நேற்று இரவு ...
வினாயகர் சதுர்த்தி விழா முதல்வர் வாழ்த்து!

வினாயகர் சதுர்த்தி விழா முதல்வர் வாழ்த்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: விநாயகரின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் ஆன சிலைகளை வைத்து வழிபடுவர். ‘வினைகளின் வேரையே களைந்தெறியும் வல்லவர் விநாயகர்’ என பதினோறாம் திருமுறையில் பாடப்பட்டுள்ளது. விநாயகர் அருளால் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துகள்....