ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

தியேட்டர்களின் வரியை அரசு குறைத்தால் சினிமா டிக்கெட் விலை குறையும் – அரசுக்கு கோரிக்கை

தியேட்டர்களின் வரியை அரசு குறைத்தால் சினிமா டிக்கெட் விலை குறையும் – அரசுக்கு கோரிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    திரையரங்குகளில் அரசு விதிக்கும் பல வரிகளை ஒன்றாக்கி குறைத்தால் சினிமா டிக்கெட் கட்டணம் குறைக்க வழி ஏற்படும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.   திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வெளியான அறிக்கை: தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது கொரானோ தொற்று பரவலை பொறுத்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என எல்லா தொழில்களையும் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது முதலில் மூடப்பட்ட தனித்திரையரங்குகள், மால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவ...
சினிமா ஷூட்டிங், தியேட்டர் திறக்க அனுமதியுங்கள் – முதல்வருக்கு பாரதிராஜா வேண்டுகோள்

சினிமா ஷூட்டிங், தியேட்டர் திறக்க அனுமதியுங்கள் – முதல்வருக்கு பாரதிராஜா வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை விவரம்.   வணக்கம் முதல்வர் அவர்களுக்கு, படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள். விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள். அதேசமயம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம். பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர். சினிமாவை நசிந்துவிடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம். முதல்வர் அவர்கள் தயைகூர்ந்த...
5ம் கட்டமாக ஜூன் 30வரை ஊரடங்கு நீடிப்பு – மத்திய அரசு

5ம் கட்டமாக ஜூன் 30வரை ஊரடங்கு நீடிப்பு – மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    5ம் கட்டமாக ஜூன் 30வரை ஊரடங்கு நீடிப்பு - மத்திய அரசு கொரானாவை கட்டுப்படுத்த ஏற்கனவே அமலில் உள்ள நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மார்ச் 25-ந்தேதியில் இருந்து பொது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. 4-வது கட்ட பொது ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் 5-வது கட்ட நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மார்ச் 25-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 14-ந்தேதி வரைக்கும், ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து மே 3-ந்தேதி வரைக்கும், மே 4-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரைக்கும், அதன்பின் மே 31-ந்தேதி வரைக்கும் என நான்கு கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது...
விமானிக்கு கொரானா உறுதியானதால் ரஷ்யா சென்ற விமானம் பாதியில் திரும்பியது!

விமானிக்கு கொரானா உறுதியானதால் ரஷ்யா சென்ற விமானம் பாதியில் திரும்பியது!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
விமானிக்கு கொரானா தொற்று உறுதியானதால் ரஷ்யா போகும் வழியில் பாதியில் திரும்பிய சிறப்பு விமானம்.   கொரானா ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமானத்தை இயக்கும் பைலட்டுகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவருக்கும் கொரானா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில், அவர்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறி தென்பட்டால் அவர்கள் விமானத்தை இயக்க அனுமதிப்பதில்லை. இந்நிலையில், ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் இன்று புறப்பட்டுச் சென்றது. விமானம் உஸ்பெகிஸ்தான் வான்பகுதியில் சென்றபோது, பைலட்டுகளில் ஒருவருக்கு கொரானா இருப்பதாக விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து விமான பைலட்டுகளை தொடர்பு கொண்டு விவரத்...
சின்னத்திரை ஷூட்டிங் நடத்த 60 பேருக்கு அனுமதி – முதல்வர் உத்தரவு

சின்னத்திரை ஷூட்டிங் நடத்த 60 பேருக்கு அனுமதி – முதல்வர் உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    சின்னத்திரை ஷூட்டிங் நடத்த 60 பேருக்கு அனுமதி - முதல்வர் உத்தரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை துவங்குவதற்கு 21.05.2020 அன்று அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், இதனை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கை குறித்து செய்தித்துறை அமைச்...
இனி உலக சுகாதார அமைப்புக்கு நிதி கிடையாது – டிரம்ப் அதிரடி

இனி உலக சுகாதார அமைப்புக்கு நிதி கிடையாது – டிரம்ப் அதிரடி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதால் இனி உலக சுகாதார அமைப்புக்கு நிதி கிடையாது - டிரம்ப் அதிரடி கொரானா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த வைரசின் தீவிரத்தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீது டொனால்டு டிரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அந்த அமைப்பின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்தார். கொரானா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதாரவாக உலக சுகாதார அமைப்பு உள்ளது. எனவே அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ. 3000 கோடி ...
வைரஸ் அதிகம் பாதித்த அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட 6 நாடுகளுக்கு செல்லும் சிறப்பு விமானம்!

வைரஸ் அதிகம் பாதித்த அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட 6 நாடுகளுக்கு செல்லும் சிறப்பு விமானம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    வைரஸ் அதிகம் பாதித்த அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட 6 நாடுகளுக்கு செல்லும் சிறப்பு விமானம்! கொரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த சிக்கலில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத்’ திட்டத்தின் முதல் கட்டமாக கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இரண்டாம் கட்ட பணி கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், ஜூன் 4-ம் தேதி முதல் 6-ம் தேதிவரை அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, சுவீடன், ஜெர்மனி, தென்கொரியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு கூடுதலாக மீட்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது. இந்த முறை செல்லும் நாடுகளில் வைரஸ் பாதிப்பு மிக மிக அதிகமாக உள்ளது. எனவே அங்கிருந்து வரும் பயணிகள் உடல் நலத்தில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரி...
வெட்டுக்கிளி படையெடுப்பு காரணமாக விமானங்கள் இயக்குவதில் ஆபத்து!

வெட்டுக்கிளி படையெடுப்பு காரணமாக விமானங்கள் இயக்குவதில் ஆபத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வெட்டுக்கிளி படையெடுப்பு காரணமாக விமானங்கள் இயக்குவதில் ஆபத்து! வெட்டுக்கிளிகள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு தற்போது இந்தியா நோக்கி படையெடுத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் தற்போது பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலத்தில் அதிகமான அளவில் பரவி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். பயிர்களை நாசமாக்கிவிட வாய்ப்புள்ளதால் அதை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெட்டுக்கிளிகளால் விமானத்தை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்காக வெட்டுக்கிளிகள் படையெடுப்பதால் விமானம் தரையிறங்கும்போது மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக இருக்கும். இதனல் விமானிகள் மற்றும் இன்ஜினீயர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் (DGCA) விமான நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங...
மே 31ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் ஸ்டாலின் அறிவிப்பு

மே 31ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் ஸ்டாலின் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
மே 31ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் ஸ்டாலின் அறிவிப்பு தி.மு.க. இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. சார்பில் வருகிற 31-ந்தேதி தேதி மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீட் இட ஒதுக்கீடு தொடர்பாகவும், கொரோனா தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு குறித்தும் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
மேற்கு வங்கத்தில் அனைத்து மத வழிபாட்டு தளங்களும்  ஜூன் முதல் தேதி திறக்கப்படும் – முதல்வர் மம்தா அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் அனைத்து மத வழிபாட்டு தளங்களும் ஜூன் முதல் தேதி திறக்கப்படும் – முதல்வர் மம்தா அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜூன் முதல் தேதியில் இருந்து அனைத்து வழிபாட்டு தளஙகளும் திறக்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.   இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது 4-ம் கட்ட பொதுமுடக்கம் நாளைமறுநாள் உடன் முடிவடைகிறது. அதன்பின்பும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. கடந்த 65 நாட்களுக்கு மேலாக எந்தவொரு வழிபாட்டு தலங்களும் திறக்கப்படாமல் உள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடினால் கொரோனா தொற்று வேகமாக பரவிவிடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து மேற்கு வங்காளத்தில் இந்து கோவில்கள், மசூதி, குருத்வாரா உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும். ஆனால் 10 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மதம் த...