சேலத்தில் சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
சேலத்தில் சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா - எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால் நடை பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்று அங்குள்ள கால்நடை பூங்காக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். தலைவாசலில் அமையும் கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்காக பல்வேறு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தலைவாசலில் கால்நடை பூங்கா அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்தது.
ரூ.1000 கோடியில் பூங்கா அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு ...









