குண்டு படத்தை பாராட்டும், பிரபலங்கள், அரசியல்வாதிகள்’
"குண்டு படத்தை பாராட்டும், பிரபலங்கள், அரசியல்வாதிகள்'
மகிழ்ச்சியில் படக்குழு.
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் படம் "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு". தினேஷ், ஆனந்தி, ரித்விகா, முனீஸ்காந்த் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் சமீபத்தில் வெளியாகி, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தினை பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள். மேலும் சில முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இப்படத்தின் சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்து காண்பிக்கப்பட்டது.
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, வேல்முருகன், தமிழன் பிரசன்னா, ஆளூர் ஷா நவாஸ், மல்லை சத்யா ஆகியோர் உட்பட பெரியாரிய, கம்யூனிச இயக்கத்தினர் பலர் கலந்துகொண்டு படம் பார்த்தார...









