சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

குஜராத்தில் குடி தண்ணீர் கேட்ட பெண்ணை அடித்து உதைத்த பாஜக எம்.எல்.ஏ.வின் காட்டுமிராண்டிதனம்..!

குஜராத்தில் குடி தண்ணீர் கேட்ட பெண்ணை அடித்து உதைத்த பாஜக எம்.எல்.ஏ.வின் காட்டுமிராண்டிதனம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாக்லெட் பாய் மாதவன் எரிமலையாக பொங்கி இருக்கிறார்... அவர் படத்துக்காகவா இல்லீங்க... நாடே தவிக்கும் தண்ணீர் பிரச்சினைக்கு... பாஜக.ஆளும் மாநிலம் குஜராத். அதிலும் சமீபத்திய மெகா வெற்றிக்கு சொந்தக்கார பிரதமர் மோடியின் நிர்வாகத்தில் இருந்த மாநிலம். நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவது போல அங்கேயும் தண்ணீர் பஞ்சம். பலராம் தவானி என்ற பிஜேபி எம்.எல்.ஏ.வின் கட்சி ஆபீசுக்கு ஒரு பெண் சென்று குடிதண்ணீர் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவுடன் போய் பேச... அந்த நேரம் எம்.எல்.ஏ. அங்கே இருந்திருக்கிறார். இந்த பெண் பேசியதை கேட்க மறுத்து அந்த பெண்ணை அலுவலகத்தில் இருந்த ஒருவரை விட்டு அடித்து வெளியில் தள்ளியிருக்கிறார் எம்.எல்.ஏ. அப்போதும் ஆத்திரம் அடங்காத எம்.எல்.ஏ. தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறந்து தெருக்குழாயடி சண்டை போல ஆபீஸ் அறையில் இருந...
சூரைப் போற்று படக் கதை – சூர்யா வெளியிட்ட ரகசியம்

சூரைப் போற்று படக் கதை – சூர்யா வெளியிட்ட ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூரைப் போற்று படக் கதை - சூர்யா வெளியிட்ட ரகசியம் சூர்யா நடிப்பில் சுதா இயக்கத்தில் வளர்ந்து வரும் "சூரரைப்போற்று" படம் வரலாற்று படம் என்று செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இது உண்மையல்ல என்றாலும் இப்படத்தில் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் சுதா கொங்காரா குறித்து பேசிய அவர், சுதா என் உடன்பிறவா தங்கை, ஆயுத எழுத்து படத்திலிருந்தே அவரை எனக்கு தெரியும். இறுதிச்சுற்று படத்தின்போதே அவருடன் பணியாற்ற விரும்பினேன். இருப்பினும் அதற்கான சூழல் தற்போதுதான் அமைந்துள்ளது. என்கிறார் சூர்யா....
தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி – பிறந்த நாளில் ஸ்டாலின் புகழாரம்

தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி கருணாநிதி – பிறந்த நாளில் ஸ்டாலின் புகழாரம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் வந்த முதல் பிறந்த நாள் என்பதால் தொண்டர்கள் பல இடங்களிலும் வழக்கத்தை விட உற்சாகமாக கருணாநிதி பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி; இன்று நிரந்தர உயிர்ப்புச் சக்தி! தலைவரே! உங்கள் பிறந்தநாள், இன்பத் தமிழினத்தின் பிறந்தநாள். நீங்கள் இருந்து சாதி...
தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா என் பாடல்களில் தானே வாழ்கிறீர்கள் – இசை நிகழ்ச்சியில் இளையராஜா சர்ச்சை பேச்சு

தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா என் பாடல்களில் தானே வாழ்கிறீர்கள் – இசை நிகழ்ச்சியில் இளையராஜா சர்ச்சை பேச்சு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா என் பாடல்களில் தானே வாழ்கிறீர்கள் - இசை நிகழ்ச்சியில் இளையராஜா சர்ச்சை பேச்சு இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ராயல்டி பிரச்சினைகளுக்கு பின் எஸ்.பி.பி. மீண்டும் இளையராஜா இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த இசை நிகழ்ச்சிக்கு ஆயிரம் ரூபாய் முதல் 10ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்ப்ட்டது. இத்தனை ஆயிரங்களில் டிக்கெட் விலை விற்கப்பட்டாலும் ரசிகர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட நிகழ்ச்சி நடத்தியவர்கள் செய்யவில்லை. சரியான குடிநீர் வசதி இல்லை. கழிப்பறை வசதிகள் இல்லை. பாதுகாப்பு சுத்தமாக இல்லை. அதிலும் ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கியவர் 10 ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களுக்கான இருக்கைகளை பிடித்து கொண்டதால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களுக்கு சீட் கிடைக்காமல் நின்றனர். இத்தனை சிரமங்களை தாண்டி இளையராஜாவின் இசையில் ம...
பிரமாண்டமான சொகுசு கப்பல் தறிகெட்டு ஓடி விபத்து – வெனீஸ் பரபரப்பு

பிரமாண்டமான சொகுசு கப்பல் தறிகெட்டு ஓடி விபத்து – வெனீஸ் பரபரப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இத்தாலியில் பயணிகள் படகு மீது பெரிய சொகுசு கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். இத்தாலியின் வெனிஸ் நகரித்தின் கியுடெக்கா (Giudecca) கால்வாயை நோக்கி 2 ஆயிரத்து 679 பயணிகளுடன் 275 மீட்டர் நீளமும், 54 மீட்டர் உயரமும் கொண்ட பிரமாண்டமான பெரிய சொகுசு கப்பல் ஒன்று சென்றுள்ளது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாடை இழந்த அந்த கப்பல் அந்த பகுதியில் இருந்த பயணிகள் படகில் மோதி பின் கப்பல் நிறுத்தும் இடத்தின் தடுப்பில் மோதியது. இந்த விபத்தின் போது அங்கே இருந்தவர்கள் எடுத்த வீடியோவில் பிரமாண்டமான சொகுசு கப்பல் கட்டுபாட்டை இழந்து தடுப்பை நோக்கி வருவதும், எதிரே இருந்த சின்னசிறிய படகை இடித்து தள்ளியதையும் பார்த்து பலர் பயந்து ஓடும் காட்சிகள் பதிவாகி உள்ளன. எதிர்பாராமல் நடைபெற்ற இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்ததாகவும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவு...
அஜீத் வாங்கிய சொகுசு கார்…!

அஜீத் வாங்கிய சொகுசு கார்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமார் நடிகர் மட்டுமல்லாமல் நிஜமான பைக் ரேசர். பார்முலா ஒன் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட நிஜ வீரர். இது தவிர ஆளிலாத குட்டி விமானங்களை இயக்கும் தொழில்நுட்பம் தெரிந்தவர். சமீபத்தில் அஜீத் நடிப்பில் ரிலீஸ் ஆன விஸ்வாசம் மெகா ஹிட் ஆனது. இப்போது வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அஜீத் பைக், கார் பிரியர் என்பத்தால் புதுசு புதுசாக கார், பைக வாங்குவது அவர் வழக்கம். அந்த வகைய்ல் இப்போது வெள்ளை நிற வால்வோ சொகுசு காரை வாங்கி இருக்கிறார். அந்த காரின் படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. நடிகர் கார் வாங்குறது ஒரு விஷயமா என்றால் அல்டிமேட் ஸ்டார்... தல... ஒத்த ரூபாய்க்கு கடலைமுட்டாய் வாங்கினாலே பரபரப்பாக்குவோம் தல மனசு கலர்ல கார் வாங்குனா சும்மாவா... என்கிறார்கள் தல ரசிகர்கள்...!...
திடீரென நமீதா வெளியிட்ட கவர்ச்சி படங்கள்…

திடீரென நமீதா வெளியிட்ட கவர்ச்சி படங்கள்…

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  திடீரென நமீதா வெளியிட்ட கவர்ச்சி படங்கள்... திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நமீதா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது, தன்னுடைய டிரேட் மார்க் தொடையழகு பளிச்சிடும் படியான படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த படங்கள் படத்துக்காக எடுக்கப்பட்டதா அல்லது பட வாய்ப்புக்கா என்பது தெரியவில்லை....
ஆடை இல்லா  அமலாபாலின் ஆடை படத்தை பார்த்து சென்சார் அதிகாரிகள் ஷாக்..!

ஆடை இல்லா அமலாபாலின் ஆடை படத்தை பார்த்து சென்சார் அதிகாரிகள் ஷாக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடிகை அமலாபால் இப்போது ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது எல்லாரும் ஷாக் ஆனார்கள். அந்தளவுக்கு அமலாபால் அறைகுறை உடையில்... உடை என்றே சொல்ல முடியாது சும்மா கிழிந்த துணிகளை உடலில் சுற்றிக்கொண்டு கவர்ச்சியாக அந்த படம் இருந்தால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதிலும் ஆடை என படத்துக்கு பேர் வைத்துக்கொண்டு கதாநாயகியகிக்கு ஆடையற்ற காட்சி எடுக்கிறார்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இந்த படத்தில் நடிப்பது குறித்து அமலாபால் கூறும்போது, “வித்தியாசமாக களம் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை. எனது கதாபாத்திரத்தை கேட்டபோது சிலிர்த்தேன். புதுமாதிரியான படமாக இருக்கும் "என்றார். தற்போது ஆடை படப்பிடிப்பு நிறைவடைந்து தொழில் நுட்ப பணிகளும் முடிந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ‘யூ’ அல்லது ‘யூஏ’ சான்ற...
மேக்கப் போடாத முகம்… நம்புங்கள் இதுதான் நிஜம் காஜல் அதிரடி..!

மேக்கப் போடாத முகம்… நம்புங்கள் இதுதான் நிஜம் காஜல் அதிரடி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சினிமாவில் நடிக்கும் பெண்கள் குறிப்பாக ஹீரோயின் யாரும் மேக்கப் இல்லாமல் வெளியிடங்களுக்கு வருவதில்லை. அப்படியே வரவேண்டிய சூழல் இருந்தால் சத்தமில்லாமல் வந்து செல்வார்கள். குறிப்பாக மேக்கப் இல்லாமல் யாரும் படம் பிடிப்பதை விரும்ப மாட்டார்கள். ஆனால் காஜல் அகர்வால் பொதுவாக எதையும் எதிர் கொள்பவர். இப்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் மேக்கப் இல்லாத படத்தை வெளியிட்டு "இதுதான் நிஜம்..." என்று கூறியிருக்கிறார். இப்படி மேக்கப் இல்லாத படத்தை வெளியிட ரொம்ப தைரியம் தேவை. காஜலுக்கு அது நிறையவே இருக்கிறது....
மாநில மொழியில் புதிய சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்…!

மாநில மொழியில் புதிய சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷ் நடிப்பில்  யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான மாரி 2  படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அதில், ரவுடி பேபி பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கு இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலில் தனுஷின் நடனத்தைவிட சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைராலான இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது. மேலும் இந்தப் பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளையும் 41 நாட்களில் 200 மில்லியன் பார்வைகளையும், 69 நாட்களில் 300 மில்லியன் பார்வைகளையும், 104 நாட்களில் 400 மில்லியன் பார்வைகளையும் 157 நாட்களில் 500 மில்லியன் பா...