சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர் மன்றம் திமுகவுக்கு ஆதரவு

உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர் மன்றம் திமுகவுக்கு ஆதரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் ரசிகர் மன்றம் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும். தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவுப்பெற்ற நிலையில், வரும்7ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் சுயேச்சையாக போட்டியிட்டனர்.   மொத்தம் 169 பேர் போட்டியிட்ட நிலையில், இதில் 129 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துகொண்டார். இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்...
வீரர்கள் தேர்வின்போது எடுத்த படம் அல்ல: கங்குலி விளக்கம்!

வீரர்கள் தேர்வின்போது எடுத்த படம் அல்ல: கங்குலி விளக்கம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளார். இந்த பதவியில் நியமிக்கப்பட்டதில் இருந்து திறம்பட செய்து வருகிறார். இவர்தான் முதன்முறையாக இந்திய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்தினார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சில தொடர்களை நடத்த முடியாத நிலையில் ஏற்பட்டது. கடந்த சீசன் ரஞ்சி கோப்பை தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரில் பெண்கள் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் வழங்கியதாக கூறப்பட்டது. விராட் கோலி கேப்டன் விவகாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில்தான், கிரிக்கெட்டில் தாதாவாக செயல்பட்ட கங்குலி, கிரிக்கெட் வாரியத்திலும் தாதாவாக செயல்பட்டு வருகிறார். வீரர்கள் தேர்வில் தலையிடுகிறார் விமர்சனம் எழுந்தது. உச்சக்கட்டமாக வீரர்கள் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவில் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் படம் ஒன்று பரவி வருகிறது. தற்...
காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா!

காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும். ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிருத்விராஜ், துல்கர் சல்மான், திரிஷா, அமலா பால் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது. இத்தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கோல்டன் விசா வழங்கிய...
ரசிகர்களுக்கு முன் உதாரணமாக மாறிய சிம்பு!

ரசிகர்களுக்கு முன் உதாரணமாக மாறிய சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றி பிறகு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு. 1984-இல் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ’உறவு காத்த கிளி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின் தொடர்சியாக குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து காதல் அழிவதில்லை, தம், அலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்தார். நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பல பரிணாமங்களில் கைதேர்ந்தவர் சிம்பு. இருப்பினும் சிம்புவின் மீது பல விமரசனங்கள் வைக்கப்பட்டு வந்தது. படங்களில் சற்று கவனம் செலுத்த தவறிய சிம்பு திடீரென அவரின் உடல் எடை அதிகரித்தது. 2019-இல் வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியான போது சுமார் 105 கிலோ எடையுடன் பருமனான கதாநாயகனாக திரையில் தோன்றினார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் உடல் எடைக்காக நடிகர் சிம்பு அ...
ஆஸ்கர் வின்னர்களுடன் இணையும் இயக்குனர் பார்த்திபன்!

ஆஸ்கர் வின்னர்களுடன் இணையும் இயக்குனர் பார்த்திபன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
1989-இல் வெளியான புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். இவர் உள்ளே வெளியே, ஹவுஸ்புல், கதை திரைக்கதை வசனம் போன்ற பல படங்களை இவர் இயக்கியிருந்தார். இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்தார். சென்ற ஆண்டுக்கான தேசிய விருதையும் இப்படம் தட்டிச் சென்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பார்த்திபன் 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தை குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்கர் நாயகர்கள் சிலர் இப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான 'வ்ஹிப்லஸ்' என்ற படத்திற்காக சிறந்த சவுண்ட் டிசைனுக்கான ஆஸ்கர் விருதை பெற்ற கிரைக் மானும், 2016-ஆம் ஆண்டு அறிவி...
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய பெருவிழா தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய பெருவிழா தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழா தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களும் பக்தர்களும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்வுப்பூர்வமான தொடர்பை பல ஆண்டுகளாகக் கொண்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமது அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு காரணங்களை முன்வைத்து இவ்வாண்டு கச்சத்தீவு திருவிழாவில் தமிழக மீனவ பக்தர்கள் ப...
புனித் ராஜ்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய பிரபல நடிகர்!

புனித் ராஜ்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகர் புனித் ராஜ்குமார். இவரின் நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்களை உலுக்கியது. இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று (பிப்ரவரி 04) பெங்களூருவில் உள்ள புனித் ராஜ்குமார் வீட்டிற்குச் சென்று அவரது புகைப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். மேலும் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமாரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனை வருடைய சமூக வலைத்தளத்தில் அவர் பகிர்ந்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணைத்து பதிவிட்டுள்ளார்....
பப்ஜி மதனுக்கு வசதிகள் செய்து கொடுக்க லஞ்சம் கேட்ட சிறைத்துறை அதிகாரி!

பப்ஜி மதனுக்கு வசதிகள் செய்து கொடுக்க லஞ்சம் கேட்ட சிறைத்துறை அதிகாரி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
யூ டியூப் சேனல்களை தொடங்கி அதன்மூலம் பிரபலமானவர் மதன். இவர் மதன், மதன் 18+, பப்ஜி மதன் உள்பட பல்வேறு சேனல்களை நடத்தி வந்தார். இந்த யூடியூப் சேனல்கள் மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் மனதளவில் பாதிக்கப்படுவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பப்ஜி மதனுக்கு சிறையில் சகல வசதிகளை செய்து கொடுக்க, அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்பது போன்ற பரபரப்பு ஆடியோ வெளியானது முதல்கட்டமாக கூகுள் பே மூலமாக 25 ஆயிரம் ரூபாய் அனுப்பிய தகவலும் வெளியாகி உள்ளது குறித்து விசாரணை நடத்தப்படும் என சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்....
அந்த நிலையை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன் – நடிகை அமலா!

அந்த நிலையை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன் – நடிகை அமலா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இயக்கி நடிகர் சர்வானாந்த் நடிக்கும் படம் கணம். இப்படத்தில் ரீத்து வர்மா, அமலா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இறுதி கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழில் 'கணம்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஒகே ஒக ஜீவிதம்' என்ற பெயரிலும்  உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் அம்மா பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. அம்மா பாடலுக்கு கிடைத்த வரவேற்பு அனைவரையும் குதுகலப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கணம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்பாக அமலா கூறியிருப்பதாவது: “மகனுக்கும், அம்மாவுக்கும் இடையிலான அன்பு என்றும் அழியாது என்பதைச் சொல்வதற்காகவே அம்மா பாடல் உருவாக்கப்பட்டது. ‘கணம்’ படத்...
ரசிகர்களை கவரும் டான் படத்தின் பாடல்!

ரசிகர்களை கவரும் டான் படத்தின் பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டிருந்த சமயத்தில் மார்ச் மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகுமென அறிவித்து ரசிகர்களை சந்தசோஷப்படுத்தியது படக்குழு. இந்நிலையில், டான் படத்தின் அடுத்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளில் ஆதித்யா குரலில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் ரசிகர்க...