செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

ஷங்கரின் அடுத்த 2 படங்களில் நடிக்கும் பாலிவுட் நடிகை!

ஷங்கரின் அடுத்த 2 படங்களில் நடிக்கும் பாலிவுட் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஷங்கரின் அடுத்த 2 படங்களில் நடிக்கும் பாலிவுட் நடிகை! ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வந்த படம் ‘இந்தியன் 2’. படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்தாண்டு நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது வரை தொடங்கப்படவில்லை. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கமலின் தேர்தல் பணி காரணமாக அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள ஷங்கர், அடுத்த படம் இயக்க தயாராகி வருகிறார். அதன்படி இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க உள்ளார். அதேபோல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படம் இயக்கவும் ஒப்பந்தமாகி உள்ளாராம். இது அந்நியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த இரண்டு படங்களுக்கும் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என ...
விக்ரம் வில்லனாக நடிக்கும்-“சியான் 60”!

விக்ரம் வில்லனாக நடிக்கும்-“சியான் 60”!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம் வில்லனாக நடிக்கும்-"சியான் 60"! விக்ரம் தனது மகன் துருவ்வை, தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘சியான் 60’ படத்தில் விக்ரம், துருவ் இருவருமே இணைந்து நடிக்கின்றனர். தந்தை, மகன் இருவரின் கதாபாத்திரங்களையும் படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர். இதில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் துருவுக்கு, விக்ரம் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தந்தை, மகன் இணைந்து நடிப்பதால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ...
இயக்குனர் அட்லீ ஷாருக்கான் படத்திற்கான பணிகளை தொடங்கினார்!

இயக்குனர் அட்லீ ஷாருக்கான் படத்திற்கான பணிகளை தொடங்கினார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் அட்லீ ஷாருக்கான் படத்திற்கான பணிகளை தொடங்கினார்! 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ. இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், அதில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் இதுகுறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், சமீபத்திய தகவல் படி இயக்குனர் அட்லீ, தற்போது ஷாருக்கான் படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் அட்லியின் மனைவி பிரியா, தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்...
அணுகுண்டு மேல் அமர்ந்திருப்பதும், அணுஉலை அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான்-சீமான் ஆவேசம்!

அணுகுண்டு மேல் அமர்ந்திருப்பதும், அணுஉலை அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான்-சீமான் ஆவேசம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
அணுகுண்டு மேல் அமர்ந்திருப்பதும், அணுஉலை அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான்-சீமான் ஆவேசம்! செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பஸ் நிலையம் எதிரே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்போரூர் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகன சுந்தரியை ஆதரித்து திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எல்லா திட்டங்களையும் தமிழகத்திலேயே நிறுவி வாழ்வதற்கு வாய்ப்பற்ற நிலையை உருவாக்கி விட்டார்கள். 2½ ஆண்டுகளுக்கு மேல் அணு உலைக்கு எதிராக போராடி இன்னும் முடியவில்லை. போராட்டத்தின்போது 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி என்று மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட கழிவுகளை கடலில் கொட்டுவதால் மிக பெரிய பாதிப்பை சந்திக்கிறோம். கல்பாக்கம் அணு உலை காரணமாக 14 கிராமங்களில் பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பத...
14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது :இலங்கை கடற்படை நடவடிக்கை!

14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது :இலங்கை கடற்படை நடவடிக்கை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது :இலங்கை கடற்படை நடவடிக்கை! எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை-நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறிய நிலையில், ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது....
இந்தியாவில் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா தொற்று!

helth tips, HOME SLIDER, NEWS, Photos, உலக செய்திகள், செய்திகள்
இந்தியாவில் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா தொற்று! இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,87,534 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 251 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,60,692 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,31,650  ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 26,490 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,95,192  பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 5,31,45,709 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது....
ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் அடுத்ததாக தயாரிக்கும் வெப் தொடர் !

ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் அடுத்ததாக தயாரிக்கும் வெப் தொடர் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் அடுத்ததாக தயாரிக்கும் வெப் தொடர் ! 75 ஆண்டுகளுக்கு மேலாக தரமான கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து, மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. அதன்படி திரில்லர் கதையம்சம் கொண்ட "தமிழ் ஸ்டாக்கர்ஸ்" என்ற வெப்தொடரை அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஈரம், வல்லினம் போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் இப்படத்தை இயக்க உள்ளார். தமிழ் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு ‘தமிழ் ஸ்டாக்கர்ஸ்’ என்ற தொடர் உருவாகிறது. சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்த தொடரை வெளியிட உள்ளனர். இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளிவர இருக்கிறது....
பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா!

பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, செய்திகள், நடிகர்கள்
பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா! பிரபல இந்தி நடிகரான அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை நடைமுறைகளை பின்பற்றி வருகிறார். அவர் தற்போது நலமுடன் உள்ளார். சமீபத்தில் அமீர்கானை சந்தித்தவர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அமீர்கான், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்....
ராகவா லாரன்ஸ் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார்!

ராகவா லாரன்ஸ் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ராகவா லாரன்ஸ் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார்! ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இதன்பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், பொருளாதாரத்தில் நலிவடைந்த தீப்பெட்டி கணேசன், பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார். கடந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில், பால் வாங்கக் கூட காசு இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறி இவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து திரையுலகைச் சேர்ந்த சிலர் இவருக்கு உதவிக்கரம் நீட்டினர். இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தீப்பெட்டி கணேசன், கடந்த திங்களன்று (மார்ச் 22) உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகி...
12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு!

helth tips, HOME SLIDER, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா தொற்று பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு! கொரோனா தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவியதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக வீடுகளில் இருந்து படித்து வந்தார்கள். 10 மாதங்களுக்கு பிறகு ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் சட்டசபை தேர்தல், கொரோனா தொற்று பரவல் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்தது. 9, 10, 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவித்தார். மேலும் 12-ம் வகுப்பு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. மே மாதம் 3-ந்தேதி தொடங்கி 23-ந் தேதி வரை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ...