செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்ல இளையராஜாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்ல இளையராஜாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்ல இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சென்னையில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவின் நிர்வாகத்திற்கும், இசையமைப்பாளர் இளையராஜாவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் அளவிற்கு சென்றது. பிரசாத் ஸ்டுடியோவிற்குள் செல்ல தன்னை அனுமதியளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், திரைப்படங்களுக்காக கைப்பட எழுதிய இசைக்‌ கோப்புகள்‌, இசைக்‌ கருவிகள்‌ மற்றும் விருதுகள் உள்ளிட்டவற்றை இருப்பதாகவும், அவற்றை எடுத்துக்‌ கொள்ளவும்‌, தியானம்‌ செய்யவும்‌ அனுமதி வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, பிரசாத் ஸ்டுடியோவை உரிமைக் கோரக்கூடாது என்றும், தங்கள் மீது தொடரப்பட்ட ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கோரிய வழக்கை திரும்பப் பெற வேண்டும் ...
லோன் ஆப் செயலி குறித்து காவல்துறை எச்சரிக்கை!

லோன் ஆப் செயலி குறித்து காவல்துறை எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
லோன் ஆப் செயலி குறித்து காவல்துறை எச்சரிக்கை! லோன் ஆப்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து கடன் பெறும் செயலி குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கூகுள்‌, பிளே ஸ்டோரில்‌ உள்ள சுமார்‌ 60 ஆன்லைன்‌ கடன்‌ அப்ளிகேஷன்களுமே ரிசர்வ்‌ வங்கியால்‌ NBFC ஆக பதிவு செய்யப்படவில்லை. எனவே, இந்த Loan App-களின் செயல்பாடுகள்‌ அங்கீகரிக்கப்படாதவைகள்‌. இந்த அப்ளிகேஷன்கள்‌ உபயோகிப்பவர்களின்‌ கைபேசியின்‌ எல்லா தகவல்களையும்‌ சேகரித்து, உபயோகிப்பவர்களின்‌ (பொதுமக்கள்‌) தனியுரிமையை மீறும்‌ வகையில்‌ அவை பயன்படுத்‌துகின்றன. கடன்‌ அடிப்படையிலான இத்தகைய அப்ளிகேஷன்களை (Loan Apps) பயன்படுத்த வேண்டாம்‌ என்று பொதுமக்கள்‌ அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. பொதுமக்கள்‌ தங்களின்‌ தனிப்பட்ட விவரங்கள்‌, ஆதார்‌ அல்லது வங்கி விவரங்களை...
‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினி

‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்திருக்கிறது. ரஜினிகாந்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்.ஆரண்ய காண்டம், பிகில் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பும், ஜெயம் படத்தில் வில்லனாக மிரட்டிய டோலிவுட் நடிகர் கோபிசந்தும் அண்ணாத்த படத்தின் வில்லன்களாக நடிக்கிறார்கள். கொரோனா ஊரடங்கு கெடுபிடிகளால், 10 மாதங்களாக தடைப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் 14ம் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம், நடிகர் ரஜினிகாந்த்...
ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி

ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து அந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்கு பெற்று வருகின்றனர். நிலையான  வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, 2017 முதல் ஜல்லிகட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிகட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் நேரடியாக கலந்து கொள்வது மட்டும் அல்லாமல்,  பொதுமக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும். ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது  கொரோனா பெருந்தொற்று காரணமாக, எதிர்வரும் 2021-ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது. · ஜ...
மீண்டும் ஜோடி சேரும் கதிர் – ஆனந்தி !

மீண்டும் ஜோடி சேரும் கதிர் – ஆனந்தி !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மீண்டும் ஜோடி சேரும் நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி கூட்டணி ! தமிழ் சினிமாவில் மிகப்பெரும் பாராட்டுக்களை குவித்த “பரியேறும் பெருமாள்” படத்தில் அட்டகாச நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி ஜோடி , மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்கள். “கைதி” படத்தில் அதிரடியான பாத்திரத்தில் நடித்து, கவனம் ஈர்த்த நடிகர் நரேன் இப்படத்தில் மீண்டும் ஒரு மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். AAAR Productions தயாரிக்கும் இப்படத்திற்கு தற்போதைக்கு “Production No 1” தலைப்பிடப்பட்டுள்ளது. டிராமா திரில்லர் வகை படமாக உருவாகும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஸாக் ஹாரிஸ் இயக்குகிறார். AAAR Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கூறியதாவது... தமிழ் திரை உலகில் இது எங்களின் முதல் திரைப்படம். தொடர்ந்து கனமான கதைகள் கொண்ட, ரசிகர்கள் விரும்பும்...
வீடுதேடி வரும் பொங்கல் பரிசுத் தொகைக்கான டோக்கன்!

வீடுதேடி வரும் பொங்கல் பரிசுத் தொகைக்கான டோக்கன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கனை 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டுமென ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதிக்குள் வழங்கப்படும். ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க பொங்கல் பரிசு விநியோகத்தை முறைப்படுத்த தெரு வாரியாக சுழற்சி முறை மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும். முற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும், பிற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்பட வேண்டும். பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கனை 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை...
சென்னையில் ஜனவரி 1-ம் தேதி முதல் சொத்து வரியுடன் சேர்த்து குப்பைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்

சென்னையில் ஜனவரி 1-ம் தேதி முதல் சொத்து வரியுடன் சேர்த்து குப்பைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னையில் ஜனவரி 1-ம் தேதி முதல் சொத்து வரியுடன் சேர்த்து குப்பைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளில் திருத்தம் செய்து கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையும், திருமண மண்டபங்களுக்கு 1000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு கூடங்களுக்கு 300 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையும், அலுவலகங்களுக்கு 300 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்படும். கடைகளுக்கு 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையும், விழாக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும் கட்டணமாக வாங்கப்படும். மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளுக்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் இந்த கட்டணத்தை சொத்து வரிய...
தயாநிதிமாறன்  வாகனம் மீது பாமக-வினர் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு!

தயாநிதிமாறன்  வாகனம் மீது பாமக-வினர் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சேலம் மாவட்டத்தில் தயாநிதிமாறன்  வாகனம் மீது பாமக-வினர் கல்வீசி தாக்கியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களை சந்திக்கும் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் தயாநிதி மாறன் கலந்துகொண்டு பேசி வருகிறார்.இதன் ஒரு பகுதியாக இன்று காலை ஓமலூரை அடுத்த சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, ஓமலூர், பொட்டிபுரம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார். அதன்பின் பூசாரிப்பட்டி நோக்கி தயாநிதிமாறன் செல்லும் பொழுது அங்கு நூற்றுக்கு மேற்பட்ட பாமகவினர் ராமதாஸ் மற்றும் அன்புமணி பற்றியும் அவதூறாக பேசியதாகக் கூறி கருப்பு கொடி காட்டியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இதில் தயாநிதி மாறன் பயணித்த வாகனத்தின் முகப்பு கண்ணாடி உடைக்கப்ப...
மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் வீடு திரும்பிய முன்னணி நாயகிக்கு கொரோனா!

மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் வீடு திரும்பிய முன்னணி நாயகிக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், நடிகைகள்
முதலில் ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த தமன்னாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு நடிகர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ராகுல் ப்ரீத் சிங் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் வீடு திரும்பினார். இதனிடையே அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. எனக்கு பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. நான் என்னை தனிமை படுத்தி கொண்டேன். நான் நன்றாக உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவரது ரசிகர்கள் அவர் நலம் பெற வேண்டும் என பிராத்தனை மேற்கொண்டு வருகின்றனர்.  ...
97 பக்க ஊழல் புகார் பட்டியல் – ஆளுநரிடம் கொடுத்தார் முக ஸ்டாலின்

97 பக்க ஊழல் புகார் பட்டியல் – ஆளுநரிடம் கொடுத்தார் முக ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
97 பக்க ஊழல் புகார் பட்டியல் - ஆளுநரிடம் கொடுத்தார் முக ஸ்டாலின் சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது திமுக தலைவர் முக ஸ்டாலினுடன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு உள்பட முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து ஆளுநர் உடனான சந்திப்பிற்கு பிறகு திமுக தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்கள் கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கெனவே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான புகாரில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தற்போது ஊழல் தடுப்புச் சட்டத...