செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

திரைப்படமாக வெளியாகும்  நடிகை “ஷகிலா” வாழ்க்கை!

திரைப்படமாக வெளியாகும் நடிகை “ஷகிலா” வாழ்க்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பெரும்புகழ் நடிகை “ஷகிலா” வாழ்க்கை திரைப்படமாக வெளியாகிறது ! “ஷகிலா” பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம். தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா உடைய வாழ்க்கை கதைதான் இப்படம். 1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காமபடங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர்வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் தான் நடிகை ஷகிலா. உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது. அப்போது வெளியாகும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கே அப்படங்கள் பெரும் சாவாலாக இருந்தது. இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ். இப்படம் நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கையை, காம படங்களில் நடித்ததற்காக, குடும்தினராலேயே புறக்கணிக்கப்பட்டதை, சினிமா உலகத்தினரே அவரது படங்கள் தடை செய்யப்படவேண்டும...
தெலுங்கு அசுரன் டீசர் அப்செட் ஆன ஜி.வி.பிரகாஷ்

தெலுங்கு அசுரன் டீசர் அப்செட் ஆன ஜி.வி.பிரகாஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு அசுரன் டீசர் அப்செட் ஆன ஜி.வி.பிரகாஷ் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான் திரைப்படம் அசுரன். தனுஷின் சினிமா கேரியரில் மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் 100 கோடி அளவுக்கு வசூலானது என சொல்லப்பட்டது . இந்த படத்தின் வெற்றி பிற மொழி தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க இப்போது தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் உருவாகியுள்ளது அசுரன். தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு அவர்களுடன் இணைந்து இந்த படத்தை தெலுங்கில் தயாரிக்கின்றார் தாணுவே தயாரித்துள்ளார். மணிசர்மா இசையமைக்கிறார். இந்நிலையில் அந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாபாத்திரத்தில் நடிகை பிரியா மணி நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆனால் அந்...
“புரட்சித் தலைவரின் அழகும், வசீகரம் என் முகத்தில்” – அரவிந்த்சாமி நன்றி

“புரட்சித் தலைவரின் அழகும், வசீகரம் என் முகத்தில்” – அரவிந்த்சாமி நன்றி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தற்போது ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி படத்தில் அரவிந்த் சாமி, எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத் தன்னுடைய தலைவி படத்தின் கடைசி நாள் புகைப்படத்தை வெளியிட்டார். அதேபோல் அரவிந்த் சாமி எம்ஜிஆர் ஆக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இறுதி நாள் படப்பிடிப்பில் புகைப்படத்தை வெளியிட்டு மேக்கப் மேனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். "புரட்சித் தலைவரின் அழகுக்கும், வசீகரத்துக்கும் எவ்வளவு பக்கத்தில் என்னைக் கொண்டுபோக முடியுமோ அவ்வளவு பக்கத்தில் கொண்டுபோக, இந்த மனிதர் தனது மாயாஜாலத்தை, இந்தப் படப்பிடிப்பில் கடைசி முறையாக என் முகத்தில் காட்டுகிறார். நன்றி ரஷீத் சார், கடைசி நாள் படப்பிடிப்பு #தலைவி'. என்று சமூ...
மிஷ்கின் படத்தின் அழகிய பேய்!

மிஷ்கின் படத்தின் அழகிய பேய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  2014-ல் வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. முருகானந்தம் தயாரிக்க மிஷ்கின் இயக்குகிறார். படப்பிடிப்பு வேலைகளை தொடங்கி உள்ளனர். பேய் கதையம்சத்தில் தயாராகிறது. இதில் ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூர்ணா பேயாக நடிப்பதாக தெரிகிறது. முதல் பாகத்தை விட அதிக திகில் காட்சிகள் இதில் இடம்பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய சவரக்கத்தி படத்தில் பூர்ணா நடித்துள்ளார். திண்டுக்கல்லில் அரங்குகள் அமைத்து பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்துகிறார்கள். நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஏற்கனவே பேயாக நடித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது....
மதங்களுக்குள் சண்டை மூட்டி நாங்கள் அரசியல் செய்யவில்லை – கமல்

மதங்களுக்குள் சண்டை மூட்டி நாங்கள் அரசியல் செய்யவில்லை – கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக திருநெல்வேலி சென்றுள்ள கமல் மதங்களுக்குள் சண்டை மூட்டி நாங்கள் அரசியல் செய்யவில்லை என பேசியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தற்போதே தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டிருக்கிறது. இதற்காக நேற்று முன் தினம் மதுரை சென்ற கமல் அங்கிருந்து தொடர்ந்து தென் தமிழக மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் “தமிழகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் முதல் விஞ்ஞானிகள் வரை பணம் இல்லாமல் இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சினைகளை சரிசெய்யும்” என்று பேசியுள்ளார் மேலும் “ஆட்சிக்கு வருவோம் என்று நாங்கள் கூறுவது மக்களே ஆள வேண்டும் என்பதற்காகதான். ஆட்சியாளர்கள் மக்களுக்கு சேவகர்களாக இருக்க வேண்டும்....
சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

HOME SLIDER, politics, செய்திகள்
  சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்.  மத்திய அரசின் அறிவுறுத்தல்படி மாதம்தோறும் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த டிசம்பர் மாதத்திற்கு வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.660 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கூடுதலா ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இதனை வண்மையாக கண்டித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். அவர் தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, விவசாயிகள் தொடங்கி ஒவ்வொரு குடிமகன் மீதும் தாக்குதலைத் தொடுத்து வருகிறது. ஏழை - நடுத்தர வகுப்பினர் உள்பட அனைத்துத் தரப்பு ம...
கழிவறையின் கூரை பகுதியை உடைத்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்த 8 அடி நீளம் கொண்ட பாம்பு!

கழிவறையின் கூரை பகுதியை உடைத்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்த 8 அடி நீளம் கொண்ட பாம்பு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  தாய்லாந்தில் உணவக கழிவறைக்குள் சென்ற ஊழியர் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நம்மூரில் சிலர் கழிவறைக்குச் செல்லும் போது அங்குச் சிறிய கரப்பான்பூச்சியைப் பார்த்தாலும் பதறியடித்து வெளியே ஓடி வருவார்கள். அப்படி இருக்கும் போது ஒருவர் கழிவறைக்குச் செல்லும் போது, அங்குப் பெரிய பாம்பு ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்? கேட்கவே பகீர் என்று இருக்கிறது அல்லவா? அப்படியான ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் ஃபிட்சன்டுக் என்ற பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றும் க்னுப் போவின் என்ற ஊழியர் ஒருவர் கழிவறைக்குச் சென்ற போது, அங்குக் கழிவறையின் கூரை பகுதியை உடைத்துக்கொண்டு 8 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது இதைக் கண்டதும் போவின் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது செல்போனை எடுத்து அந்த பாம்பைப...
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பிரதமர் என்றால் அது சர்வாதிகாரம் – மோடியை மறைமுகமாக வெளுத்த கமல்

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பிரதமர் என்றால் அது சர்வாதிகாரம் – மோடியை மறைமுகமாக வெளுத்த கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பிரதமர் என்றால் அது சர்வாதிகாரம் - மோடியை மறைமுகமாக வெளுத்த கமல் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் மற்ற கட்சிகளை விட கமல் முந்திக் கொண்டு பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். தேர்தல் கமிஷன் கமல் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தராமல் வேறு கட்சிக்கு ஒதுக்கி விட்டது. இதில் கடுப்பான கமல் மத்திய அரசையும் குறிப்பாக மோடியையும் சகட்டுமேனிக்கு வெளுத்து வருகிறார். இன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் எதற்கெடுத்தாலும் ஒரே... ஒரே என சொல்லுகிறவர்கள் சர்வாதிகாரம் நிறைந்தவர்கள் என மோடியை வெளுத்திருக்கிறார். "ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ’ஒரே பிரதமர்’. எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு. சம நீதியும், சமூக நீதிய...
புதுமைப்பித்தன் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் – முதல் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட கமல்ஹாசன்

புதுமைப்பித்தன் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் – முதல் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட கமல்ஹாசன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை செய்து வரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், முதல் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் தொடங்கி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி என அடுத்தடுத்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்தத் தேர்தலின் போது, எம்ஜிஆரின் மடியில் தவிழ்ந்து வந்தவன் எனக் கூறி ஆக்ரோஷமாக பேசி வருகிறார் கமல்ஹாசன். மேலும், அரசியலில் தன்னை யாரும் இயக்கவில்லை, யாராலும் இயக்கவும் முடியாது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் தேர்தல் வாக்...